தொல். திருமாவளவன்-தமிழ் தேசியப் பேரவைசந்திப்பு

இன்று (03.07.2026) மாலை சுமார் 5.00 மணியளவில், சென்னை கேகே நகரில் அமைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில், தொல். திருமாவளவன் அவர்களை, தமிழ் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இன்றைய தினம் காலை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு விஜய் அவர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து, மாலை நடைபெற்ற இச்சந்திப்பில்,
* நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்;
* தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கேசன்;
* ஜனநாயகத் தமிழரசுக் கட்சியின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா;
* தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன்;
* தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ்;
* உத்தியோகபூர்வப் பேச்சாளர் க. சுபாஸ்; மற்றும்
* கொள்கை பரப்புச் செயலாளர், சிரேஷ்ட சட்டத்தரணி ந. காண்டீபன்
ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின்போது, இலங்கையில் தமிழர்களின் அரசியல் பிரச்சினை தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குள் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினையை உள்வாங்கும் வகையிலான எந்தவொரு அரசியலமைப்பு ஏற்பாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும், ஏக்யராஜ்ய அரசியலமைப்பை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும், இந்திய மத்திய அரசின் ஊடாக இலங்கை அரசின் மீது உரிய அரசியல் மற்றும் இராஜதந்திர அழுத்தங்களைச் செலுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்.
அதேவேளை, தமிழர்களின் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகிய அடிப்படை அரசியல் அங்கீகாரங்களை அடிப்படையாகக் கொண்ட, சமஷ்டி அடிப்படையிலான நிலையான அரசியல் தீர்வே தமிழ் மக்களின் நீண்டகால தேசிய இனப் பிரச்சினைக்கான நியாயமான தீர்வாகும் என்பதையும் எடுத்துரைத்தோம்.
மேலும், நீண்டகாலமாக இலங்கைத் தமிழர் மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்கும் இடையில் நிலவி வரும் கடல்சார் மீன்பிடிப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சுயாதீனமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டதோடு, அதற்கான தமிழ்நாட்டின் தொடர்ச்சியான அரசியல் ஆதரவும் கோரப்பட்டது.
இதேவேளை, தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழ் அகதிகளின் பிரச்சினைகளுக்கு மனிதாபிமானமும் நிரந்தரத்தன்மையும் கொண்ட தீர்வுகளை உருவாக்குவதன் அவசியம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பு பயனுள்ளதொரு அரசியல் கலந்துரையாடலாக அமைந்ததுடன், தமிழர் தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயற்படுவதன் அவசியம் குறித்து இரு தரப்பினரும் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்
police rcmp

ஒட்டாவாவில் 14 மணித்தியாலங்களுக்கும் மேலாக பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த பெண் பொலிஸாரால் மீட்பு

July 3, 2026

ஒட்டாவா குடியிருப்புப் பகுதி ஒன்றில் பாரிய பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் நிலவி வந்த பிணைக்கைதி விவகாரம், 14 மணித்தியாலங்களுக்கும் மேலான

canada rain

னடாவில் இந்த கோடைகாலத்தில் நிலவும் அதீத காலநிலை மாற்றங்களுக்குப் பின்னணியில் உள்ள காரணம் என்ன?

July 3, 2026

இந்த கோடைகாலத்தில் கனடாவின் எந்தவொரு பகுதியை உற்று நோக்கினாலும், மக்கள் பல்வேறு வகையான தீவிர காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

X6NZHLCWWUNIWHTLIV5HUMMF6A

கியூபெக் நகர் அருகே காடுகளடர்ந்த பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 51 வயது பெண் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி: பொலிஸார்

July 3, 2026

கடந்த வாரம் காடொன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 51 வயதுடைய பெண், ஒரு கொலைக் குற்றத்திற்கு (homicide) ஆளாகியுள்ளார் என்று கியூபெக்

fire

பரி (Barrie) நகரில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் ‘கணிசமான சேதம்’

July 3, 2026

வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தென்கிழக்கு பரி (Barrie) பகுதியில் உள்ள வீடொன்று ‘கணிசமான அளவில்’ சேதமடைந்துள்ளதாக

dr

அனைத்து அரச நிறுவனங்களும் போதைப் பொருள் ஒழிப்பு தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும்

July 3, 2026

போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி

toronto poli

ஸ்கார்பாரோ பூங்காவில் கத்தியுடன் வந்த சந்தேகநபர் ஒருவர் நபர் மீது தாக்குதல்: பொலிஸார் தகவல்

July 3, 2026

ஸ்கார்பாரோ (Scarborough) பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டொரண்டோ

kepa 11

கேப்பாப்புலவில் தங்களுக்குரிய பூர்விக நிலப்பரப்பை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க கோரி  ஞாயிற்றுக்கிழமை (5 ஆம் திகதி) போராட்டம்-பாதிக்கப்பட்டோர் அழைப்பு 

July 3, 2026

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் தங்களுக்குரிய பூர்விக நிலப்பரப்பை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க கோரி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (5 ஆம் திகதி)

735393744_122205327890574891_1122860786103625680_n

தொல். திருமாவளவன்-தமிழ் தேசியப் பேரவைசந்திப்பு

July 3, 2026

இன்று (03.07.2026) மாலை சுமார் 5.00 மணியளவில், சென்னை கேகே நகரில் அமைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில், தொல்.

8

கோவையில் செமி கண்டெக்டர் பூங்கா வருவது நிச்சயம் – அமைச்சர் கீர்த்தனா உறுதி

July 3, 2026

கோவை: இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்னிந்திய மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, கோவையின் தொழில் வளர்ச்சிக்கான

7

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விலகல்

July 3, 2026

சென்னை: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அக்கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர்

peel poli

‘பாரிய’ சில்லறை விற்பனைத் திருட்டு விசாரணை குறித்த விபரங்களை வெளியிடவுள்ள பீல் பொலிஸார்

July 3, 2026

பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) வெள்ளிக்கிழமை காலை ஸ்கொயர் ஒன் மால் (Square One Mall) வணிக

6_dmk-mla-anitha-radhakrishnan-arrested-political-reactions-03-07-2026

திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது; மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி கண்டனம்

July 3, 2026

ஆத்தூர்: முதல்-அமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தி.மு.க.