லால்குடி:
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்தது ஏன் என்பது குறித்து லால்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். தொகுதி வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய லீமா ரோஸ், “தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், எங்களது தொகுதி வளர்ச்சிக்காகவும் தான் நாங்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்குப் ‘புதுமைப்பெண்’ மற்றும் ‘தமிழ்த்தவப்புதல்வன்’ திட்டத்தின் கீழ் தலா ஆயிரம் ரூபாய் வழங்கிய முதலமைச்சர் விஜய்க்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல், மகளிருக்கான திட்டங்களையும், புதிய ‘சிங்கப்பெண்’ திட்டத்தையும் நாங்கள் வரவேற்கிறோம்” என்றார்.
மேலும், தவெக-வின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசிய அவர், “மகளிர் உரிமைத்தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கக் கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்று முதல்வர் விஜய் கேட்டுள்ளார். நிதி நிலைமையைச் சீரமைத்த பின் அது நிச்சயம் வழங்கப்படும். அதேபோல், ஒரே நாளில் 717 டாஸ்மாக் கடைகளை மூடி முதல்வர் அதிரடி காட்டியுள்ளார், இது குடும்பப் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிமுக-வை யாரோ பிரிப்பது போல் பேசுகிறார்கள், ஆனால் கட்சியை ஒன்று சேர்க்கத்தான் இப்போது ஏற்பாடுகள் நடந்து வருகின்றன; கூடிய விரைவில் அனைவரையும் ஒன்று சேர்த்துவிடுவோம்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார். எஸ்பி வேலுமணி அணியில் இருந்து லீமா ரோஸ் தவெக அரசை ஆதரித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
#LeemaRoseMLA #Lalgudi #ADMK_Crisis #VijayAsCM #TVK_Government #BreakingNews #May16 #TamilNaduPolitics #AiadmkSplit #TasmacClosure #MagalirUrimaiThogai #PudhumaiPenn #ThalapathyVijay #NewGovernmentTN #SPVelumani #LalgudiMLA #WomenInPolitics #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_