தேவேந்திர முனையில் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு கோரி கையெழுத்து சேகரிப்பு

பெலவத்தை அலுவலகத்தினால் நாட்டுக்கும் குறிப்பாக புத்த சாசனத்துக்கும் பாரிய அநீதி இழைக்கப்படுவதாகவும், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி வெள்ளிக்கிழமை (09) தேவேந்திர முனையில் இருந்து கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் புதன்கிழமை (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ரில்வின் சில்வா உள்ளிட்ட பெலவத்தை அரசியல் தரப்பினர் தொடர்பில் நான் கேள்வி எழுப்புகின்றேன். பெலவத்தை அலுவலகத்தினால் நாட்டுக்கும் குறிப்பாக சம்புத்த சாசனத்துக்கும் பாரிய அநீதி இழைக்கப்படுகின்றது. நாட்டை அபிவிருத்தி செய்யாமல் துவேஷத்தை விதைத்து, பழிவாங்கி, மக்களை அநாகரிகமான நிலைக்கு கொண்டு செல்லும் அதர்மமான ஆட்சிக்கு எதிராகவே நான் குரல் எழுப்புகின்றேன்.

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு தண்டனை வழங்கப்பட்ட விடயத்தை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். நீதிமன்றத்துக்கு நாம் நூறு வீதம் மதிப்பளிக்கின்றோம். ஆனால், அரசியலமைப்பின் 34ஆவது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

எதிர்வரும் 9ஆம் திகதி காலை 7 மணிக்கு தேவேந்திர முனையில் பூஜை இடம்பெறும். பின்னர் காலை 8 மணியளவில் மாத்தறை நகரம், காலி, ஹபராதுவ, வெலிகம உள்ளிட்ட பகுதிகளில் எமது குழுக்கள் செயற்படும். நாள் முழுவதும் அன்பு, கடமை, நன்றியுணர்வின் அடிப்படையில் மக்களிடம் கையெழுத்துக்களைப் பெற்று, ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுப்போம்.

பிக்குகள், பிக்குணிகள், உபாசகர்கள், உபாசிகைகள் என நான்கு தரப்பினரும் இந்த நடவடிக்கையில் இணைந்துகொள்ள வேண்டும். ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குங்கள் என்று கூறுவதற்குக்கூட சிலர் அஞ்சுகின்றனர். ஊடக அடக்குமுறைக்கு அவர்கள் பயந்துள்ளனர். ஆனால் மக்கள் அஞ்சக்கூடாது.

தேசிய பிக்கு முன்னணியைச் சேர்ந்த தேரர்கள் ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டமை தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய மன்னிப்பு பின்னர் நீதிமன்றத்தினால் இரத்துச் செய்யப்பட்டது. 1994ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வழங்கிய மன்னிப்புகளையும், 1977ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன வழங்கிய மன்னிப்புகளையும் நினைவுகூர்ந்து, அதேபோன்று எமது ஞானசார தேரருக்கும் மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

தர்மத்துக்காகவும் அதர்மத்துக்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்தை கைவிடமாட்டேன். இந்த அரக்கர்களை விரட்டும் வரை எனது போராட்டம் தொடரும் என்றார்.

jud

குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பு: கோட்டை முன்னாள் நீதவான் மீண்டும் சேவையில்

October 8, 2026

கொழும்பு கோட்டை நீதவானாக கடமையாற்றிய போது இடைநீக்கம் செய்யப்பட்ட கோசல சேனாதீரவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் சேவையில்

arr

போலி நிறுவனங்கள் மூலம் $2.5 கோடி வெளிநாட்டுக்கு? மற்றொரு சந்தேகநபர் கைது

October 8, 2026

பொருட்களை இறக்குமதி செய்யாமல் போலி நிறுவனங்கள் மூலம் 2.5 கோடி அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 750 கோடி /

sa

தேசிய சாரணர் ஜம்போரி 2027 ஜனவரி 17 முதல் 23 வரை

October 8, 2026

இலங்கை சாரணர் இயக்கத்தின் 115 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 11 ஆவது தேசிய சாரணர்

man

தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

October 8, 2026

மன்னார் மாவட்டத்தில் இந்த மாத ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்

thiththa

தேவேந்திர முனையில் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு கோரி கையெழுத்து சேகரிப்பு

October 8, 2026

பெலவத்தை அலுவலகத்தினால் நாட்டுக்கும் குறிப்பாக புத்த சாசனத்துக்கும் பாரிய அநீதி இழைக்கப்படுவதாகவும், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு

(c)PragMatrix

“முதல்வர் விஜய் எந்த பங்களாவில் தங்குவார் என்பதையும் வேட்புமனுவில் குறிப்பிட வேண்டுமா?” – நீதிமன்றம் சரமாரி கேள்வி!

October 7, 2026

சென்னை: பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை ரத்து செய்யக் கோரித் தொடரப்பட்ட வழக்கில் சென்னை

7

“முதலமைச்சர் விஜய் சார்பாகவே நாங்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறோம்!” – அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமான விளக்கம்!

October 7, 2026

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் நேரடியாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டியளிப்பதில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வரும் நிலையில்,

shiranthi are

ரூ. 100 இலட்சம் நிதி முறைக்கேடு வழக்கு.. ஷிரந்தி ராஜபக்‌ஷவிற்கு ஒக். 13 வரை விளக்கமறியல்!

October 7, 2026

முன்னாள் ஜனாபதிதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை

6

“தடையற்ற மின்சாரம் வழங்க 4,500 மெகாவாட் மின்சாரம் அவசர கொள்முதல்!” – அமைச்சர் நிர்மல்குமார் விரிவான விளக்கம்!

October 7, 2026

சென்னை: தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு எவ்வித மின்தடையும் இன்றி தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்காக, வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட்

5

“மக்களின் குறைகளைக் கேட்டறிந்த முதல்வர் விஜய்!” – பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகம் மற்றும் ஆவின் பால் பண்ணையில் அதிரடி ஆய்வு!

October 7, 2026

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (அக்டோபர் 07) சென்னை, மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணை

photo-collage.png

விளக்கமறியலுக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஷிரந்தி ராஜபக்‌ஷ!

October 7, 2026

முன்னாள் ஜனாபதிதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை

vikatan_2024-03_d14ec0b8-45e1-4c26-ab54-a25204a35835_GE1xMcEWkAAmNSf

“ஞானேஷ்குமார் தலைமையில் நடந்த தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும்!” – தேர்தல் ஆணையம் மீது சீமான் கடும் பாய்ச்சல்!

October 7, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற தேர்தல்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என நாம்