இலங்கை தமிழ் அரசு கட்சியினர் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று (18) திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் நடைபெற்றது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகர சபை மேயர் க.செல்வராசா (சுப்ரா) உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு உண்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டது.