தாமரை கோபுரத்தை நீல நிறமாக்கிய விழிப்புணர்வுப் பயணம்

நீரிழிவு நோய் குறித்த தேசிய மற்றும் உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் வகையில் உலக நீரிழிவு தினத்துக்கு இணங்க, தாமரை கோபுரத்தை நீல நிறத்தில் ஒளிரச் செய்யும் விசேட நிகழ்ச்சி ஒன்று இலங்கை நீரிழிவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனியின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் உலகளாவிய திட்டத்திற்கு இணங்க, உலக நாடுகள் பலவற்றிலும் பிரசித்தி பெற்ற சின்னங்கள் நீல நிற ஒளியால் ஒளிரச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கையின் முக்கிய அடையாளமான கொழும்பு தாமரை கோபுரமும் அந்த சர்வதேச திட்டத்தில் இணைந்துகொண்டது.

நீரிழிவு நோய் குறித்த சமூக விழிப்புணர்வை அதிகரிப்பது, நோயை முன்கூட்டியே கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்துவது மற்றும் அதனை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த மக்களை ஊக்குவிப்பது ஆகியவை இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்களாகும்.

இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி, நீரிழிவு என்பது ஒரு நபரின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கக்கூடிய தீவிரமான தொற்றா நோயாகும் என வலியுறுத்தினார்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோயின் ஆரம்ப கட்டத்தில் தெளிவான அறிகுறிகள் தென்படுவதில்லை என்பதால், முறையான சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுவதும், தொடர்ச்சியாக மருத்துவ ஆலோசனைகளைக் பின்பற்றுவதும் அவசியமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், நோயை முறையாகக் கட்டுப்படுத்தத் தவறினால் இதய நோய், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் கண்பார்வை குறைபாடு போன்ற தீவிர சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தினசரி உடல் உழைப்பு மற்றும் புகையிலை பயன்பாட்டைத் தவிர்ப்பதன் மூலம் நீரிழிவு அபாயத்தைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துக் கொள்ள முடியும் என்றார்.

சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் 2024 ஆம் ஆண்டு தரவுகளின்படி, 20 வயதுக்கும் 79 வயதுக்கும் இடைப்பட்ட குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான இலங்கை மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தமது வாழ்க்கை முறையை ஆரோக்கியமான முறையில் மாற்றியமைத்துக்கொண்டு, உரிய காலப்பகுதிகளில் முறையான சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்வதில் பொதுமக்கள் அனைவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

str

2027 வரவு செலவுத் திட்டம் : பல்வேறு தொழிற்சங்கத்தினர் நாளை எதிர்ப்பு போராட்டம்

November 16, 2026

2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் தமது துறைக்கான மேலதிக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை, முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என

siv

உறுதியான கொள்கையை எப்போதுமே விடாப்பிடியாக தன் இதயத்தில் சுமந்து மண் விடுதலைக்காய் இறுதிவரை உழைத்தவர் அமரர் சிவாஜிலிங்கம்

November 16, 2026

தமிழ் தேசியத்தின் உறுதியான கொள்கையை எப்போதுமே விடாப்பிடியாக தன் இதயத்தில் சுமந்து பல அச்சுறுத்தல்கள், கொலை மிரட்டல்கள், படையினரின் விசாரணைகள்

k

சூரன் போர் நிகழ்வில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வாக்குவாதம்

November 16, 2026

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் ஞாயிற்றுகிழமை (15) சூரன் போர் நிகழ்வு இடம்பெற்றது. இதனால் பெருந்தொகையான பொதுமக்கள் ஆலய சுழலில் ஒன்று

gle

இலங்கை தொழில்முனைவோர்களை ஒன்றிணைக்கும் ‘GLEC’ டிஜிட்டல் தளம் அறிமுகம்!

November 16, 2026

உலகம் முழுவதும் பரந்து வாழும் இலங்கைத் தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில்வல்லுநர்களை ஒரே டிஜிட்டல் தளத்திற்குக் கொண்டுவரும் Global Lankan Entrepreneur

b

தாமரை கோபுரத்தை நீல நிறமாக்கிய விழிப்புணர்வுப் பயணம்

November 16, 2026

நீரிழிவு நோய் குறித்த தேசிய மற்றும் உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் வகையில் உலக நீரிழிவு தினத்துக்கு இணங்க, தாமரை கோபுரத்தை

Judment

ஷிரான் பாஸிக்கிற்கு மேலும் 90 நாட்கள் தடுப்பு காவல்!

November 16, 2026

முக்கியப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக மத்திய குற்ற விசாரணைப்

ha

மாணவர்கள் பாடசாலை வருகை – கட்டாய கல்வி பெற்றோரின் முக்கிய பொறுப்பு – பிரதமர்

November 15, 2026

சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவது கட்டாயமானது எனவும், ஒவ்வொரு பிள்ளையும் 13 வருடங்கள் கட்டாயமாகக்

hur

ஹோர்முஸில் கண்ணிவெடியில் சிக்கின 5 எண்ணெய்க் கப்பல்கள்

November 15, 2026

ஹோர்முஸ் நீரிணையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5 எண்ணெய்க் கப்பல்கள் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான்

in

தொடரைக் கைப்பற்றிய இந்தியா

November 15, 2026

நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் இந்தியா வென்றிருந்ததோடு,

sam

சமல் ராஜபக்ஷவின் மனைவி காலமானார்

November 15, 2026

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மனைவியான விஜேவர்தன சந்திரா மாலினி (75), ஞாயிற்றுக்கிழமை (15) நண்பகல் காலமானார். திடீர் சுகவீனம்

8

“மீண்டும் மாணவர்களைச் சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்!” – நவ.18-ல் தவெகவின் 2-ஆம் கட்ட கல்வி விருது விழா!

November 15, 2026

சென்னை: தவெக சார்பில் இரண்டாம் கட்டக் கல்வி விருது வழங்கும் விழா வரும் நவம்பர் பதினெட்டாம் தேதி சென்னையில் மிகச்

7

“செல்வப்பெருந்தகை எந்தக் கட்சியில் இருக்கிறார்?!” – காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் சரமாரி கேள்வி!

November 15, 2026

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தற்போது எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதே தமக்குத் தெரியவில்லை எனத்