சென்னை
தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் 110 விதியின் கீழ் எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் வாகனம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு மற்றும் ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்தச் சூழலில், முக்கியப் பிரச்சினை ஒன்றைக் கையில் எடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று அவையிலிருந்து அதிரடியாக வெளிநடப்புச் செய்தனர்.
“தவெக எம்.எல்.ஏ.க்கள் எதற்காக கத்துகிறார்கள்?”:
வெளிநடப்புச் செய்த பின்னர் அவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சட்டப்பேரவையில் தவெக எம்.எல்.ஏ.க்கள் எதற்காக கத்துகிறார்கள் என்றே தெரியவில்லை,” என்று ஆவேசமாகக் கூறினார்.
வெளிநடப்புக்கான காரணம் என்ன?
தொடர்ந்து வெளிநடப்புக்கான காரணத்தை விளக்கிய அவர், “சவுதி அரேபியாவில், மயிலாடுதுறையைச் சேர்ந்த தமிழக மீனவர் ஒருவர் ஈரான் தாக்குதலில் உயிரிழந்த விவகாரம் குறித்துப் பேரவையில் பேச எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. உலகின் எந்தப் மூலையில் ஒரு தமிழன் பாதிக்கப்பட்டாலும், அவருக்காக உடனடியாகக் குரல் கொடுப்பதே நமது வழக்கம்,” என்றார்.
“அதிமுக, திமுக அரசாக இருந்தால்…”:
மேலும் பேசிய அவர், “தமிழருக்கு ஒரு பாதிப்பு என்றால் உடனே கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும். நாங்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்து 5 நாள்களாகியும் இதுவரை அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதுவே முந்தைய அதிமுக அல்லது திமுக அரசாக இருந்திருந்தால், நிச்சயமாக இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தை உடனடியாக எடுத்திருப்போம்,” என்று தவெக அரசின் செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித்தார்.
#EdappadiPalaniswami #EPS #AIADMK #TNAssembly #TVKGovernment #ChiefMinisterVijay #TamilFishermanIssue #MayiladuthuraiNews #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates