விழுப்புரம்:
தவெக அமைச்சரவையில் தான் இணையப் போவதாக வெளியாகும் செய்திகள் வெறும் வதந்திகளே எனப் பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பதவி?:
அண்மையில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “சௌமியா அன்புமணி தவெக அமைச்சரவையில் இடம்பெற்றால் நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இடைத்தேர்தல்களுக்குப் பின்னர் பாமகவின் ஆதரவுடன் தவெக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகின.
வதந்தி என மறுப்பு:
இந்நிலையில், விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சௌமியா அன்புமணி, இந்தத் தகவல்களை முற்றிலுமாக மறுத்தார். தான் கட்சி மாறி தவெக அமைச்சரவையில் இணையப் போவதாக வரும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அவற்றுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் எனவும் அவர் விளக்கமளித்தார்.
முற்றுப்புள்ளி:
இதன் மூலம் தவெக – பாமக இடையிலான கூட்டணி மற்றும் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக எழுந்துள்ள அரசியல் யூகங்களுக்குத் தற்போதைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
#SowmiyaAnbumani #PMK #TVK #TNPolitics #TamilNaduCabinet #CMVijay #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive