சென்னை:
தமிழகத்தில் நிலவும் அரசியல் இழுபறியைத் தீர்க்க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உடனடியாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனப் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநரின் செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டதாக இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ராமதாஸ் தனது அறிக்கையில், “2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் தாமதப்படுத்துவது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஆளுநரை வைத்துப் பின்புலத்தில் இருந்து பாஜக இயக்குவதாக மக்கள் கருதுகின்றனர். தமிழகத்தின் நலன் கருதி காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஏற்கனவே ஆதரவு அளித்துள்ள நிலையில், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அரசியல் செய்யும் தம்பி திருமாவளவன் அவர்களும் விஜய்க்கு ஆதரவு அளிக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை மதித்து, ஒரு புதிய மாற்றத்திற்கான ஆட்சியை ஏற்படுத்த திருமாவளவன் தனது ஆதரவை உடனே வழங்கி, அமைய உள்ள அரசுக்குச் சிறந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். பரம எதிரிகளாகக் கருதப்படும் பாமக மற்றும் விசிக இடையே, தமிழக அரசியல் சூழலுக்காக ராமதாஸ் விடுத்துள்ள இந்தத் தூது, அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Ramadoss #PMK #Thirumavalavan #VCK #Vijay #TVK #BreakingNews #May9 #TamilNaduPolitics #PoliticalRequest #VijayAsCM #MajorityTest #ThalapathyVijay #StalinVsVijay #ElectionResults2026 #NewGovernmentTN #AssemblyUpdate #PoliticalChange #DravidianPolitics #VijayMakkalIyakkam_“`