தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் – மு.கோமகன்

றையில் நீண்ட காலமாக இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அதேவேளை அவர்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளரும் முன்னைநாள் அரசியல் கைதியுமான முருகையா கோமகன் தெரிவித்தார்.

இலங்கை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளால் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் மிகுந்த அச்சத்தின் மத்தியில், இன்றையதினம்(8.8.2026) கொழும்பு மகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு சென்று தமது பிள்ளைகளை பார்வையிட்டனர்.இதன்போது கோமகனும் உடனிருந்தார்.

இது குறித்து முருகையா கோமகன் கருத்து தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய மகசின் சிறைச்சாலையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கே ஒரு மரணமும் சம்பவித்தது.அங்கே தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் தடுத்து வைக்கப்பட்டுள்ளளனர்.

கைதிகளின் பாதுகாப்பு

அதேபோல வெலிக்கடை சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த சிறைச்சாலைகளில் தற்போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இருப்பினும் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு என்பது தொடர்ச்சியாக கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

கடந்த காலங்களில் அரசியல் கைதிகளுக்கு சிறைகளில் இடம்பெற்ற சம்பவங்களை நினைக்கும்போது அச்சம் கொள்ள தோன்றுகிறது. பெற்றோரும் அங்கு உள்ள கைதிகளும் அச்சமான சூழ்நிலையில் உள்ளார்கள்.

ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதிகள் வழங்தப்பட்டது. அத்துடன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.

இந்த விடயத்தை எம்மிடம் நினைவுபடுத்திய அரசியல் கைதிகள், இது குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறும், தமது விடுதலையை உறுதிப்படுத்துமாறும் கூறியுள்ளனர்.

எனவே இதனை கருத்தில் கொண்டு அரசாங்கமானது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

அதேவேளை தமிழ் மக்களது வாக்குகளை பெற்று பதவிக்கு வந்தவர்கள் வெறுமனே பார்வையாளர்களாக இருக்காமல் அவர்களது விடுதலைக்காக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு பிணை வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டதான செய்தி ஒன்று அண்மையில் வெளிவந்தது. ஆனால் அவர்கள் இன்னமும் சிறைக்குள் தான் இருக்கின்றார்கள்.

அதில் இருவருக்கு பிணை வழங்குவதற்கான மேன்முறையீட்டு வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வழக்கிற்கான பிணையே வழங்கப்பட்டது. அவர்களுக்கு எதிராக வேறு நீதிமன்றங்களில், வேறு வழக்குகள் நடந்துகொண்டு இருக்கின்றன.

அந்தவகையில் அந்த வழக்குகளுக்கும் பிணை வழங்கப்பட்டால் மட்டுமே அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். அந்த வழக்குகளுக்குரிய திகதிகள் எதிர்வரும் 10ஆம் மாதமே உள்ளதால் அவர்கள் தொடர்ந்தும் சிறையிலேயே இருக்கின்றாகள். எனவே அவர்கள் இன்னமும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்