தமிழர்களின் இன ஓர்மையை சிதைக்கும் இலங்கை இனவாத அரசின் சதியை இருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்!-சீமான்

தமிழர்களின் இன ஓர்மையை சிதைக்கும் இலங்கை இனவாத அரசின் சதியை இருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது கடந்த 25.04.26 சனிக்கிழமை அன்று ஈழத்தாயகத்தினை சேர்ந்த 3 மீனவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதன் காரணமாக தமிழ்நாட்டு மீனவர்கள் நடத்திய பதில் தாக்குதலில் இருவர் தப்பியோடிய நிலையில், காங்கேசன் துறையைச் சேர்ந்த அயந்தன் என்ற தமிழ் மீனவரை, தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபடுத்தி கொண்டுவந்துள்ள நிகழ்வு அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டு தமிழ் மீனவர்களுக்கும், ஈழத்தாயக தமிழ் மீனவர்களுக்கும் இடையே பகைமையை உருவாக்கும் இதுபோன்ற கசப்பான நிகழ்வுகள் மிகுந்த வருத்தமளிக்கிறது. சிறைபிடிக்கப்பட்ட காங்கேசன்துறை மீனவர் அயந்தன் தற்போது தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை இருதரப்பினர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றது. தமிழ்நாடு காவல்துறை விசாரணை மூலம் உண்மை நிலையை கண்டறிவதோடு, காயமடைந்த மீனவருக்கு உரிய மருத்துவம் அளித்து, அவர் விரைவில் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

ஏற்கனவே, தமிழக மீனவர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களும், தமிழர் படகுகளைப் பறித்து அரசுடைமையாக்கிக் கொள்ளும் அநீதியும், வலையறுப்பு நிகழ்வுகளும், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை நடுக்கடலிலே வைத்து தாக்குவது, ஆயுதத்தைக் கொண்டு துன்புறுத்துவது, அவர்களது உடைமைகளைப் பறித்துக்கொள்வது, படகுகளைச் சேதப்படுத்துவது, மீனவர்களைச் சிறைபிடிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என இலங்கை கடற்படை அரங்கேற்றிவரும் கொடுமைகளும் சொல்லி மாளக்கூடியதல்ல. இலங்கை கடற்படையினரின் தாக்குதலின் மூலம் இதுவரை பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்துள்ளனர். 850-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நடுக்கடலிலே கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கிறது.

நூற்றுக்கணக்கான தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறைகளில் தொடர்ச்சியாக வாடிக்கொண்டுள்ளனர். இருந்தபோதிலும், இதுவரை தமிழக மீனவர்கள் மீதான இக்கோரத் தாக்குதல்களுக்கும், அநீதிகளுக்கும் எதிராக இந்திய ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்ததுமில்லை. எதிர்வினையாற்றியதும் இல்லை. இத்தகுச் சூழலில் இருநாட்டு தமிழ் மீனவர்களிடையே நடைபெறும் இதுபோன்ற தாக்குதல்கள், இலங்கை இனவாத ராணுவத்தால் திட்டமிட்டு நடத்தப்படும் கொடுமைகளை மறைத்து, இங்குள்ள தமிழ் மீனவர்களுக்கும், ஈழத்து தமிழ் மீனவர்களுக்கும் இடையேதான் பிரச்சனை என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்குவது நிலைமையை மென்மேலும் சிக்கலாக்கவே வழிவகுக்கும்.

தமிழ் மக்களிடையே நிரந்தர பகையை உருவாக்க நடைபெறும் இதுபோன்ற சூழ்ச்சிகள் குறித்து இருநாட்டு தமிழ் மீனவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொப்புள்கொடி சொந்தங்களான தமிழ் மீனவர்கள் தங்களுக்குள் நிலவும் எல்லை சிக்கலையும், மீன்பிடி சிக்கலையும் பேச்சுவார்த்தை மூலம் எளிதில் தீர்த்துக்கொள்ள முடியும். சிங்கள இராணுவம் ஈவிரக்கமற்று தொடர்ச்சியாக தமிழக மீனவர்களைச் சிறைபடுத்தி வருவதும், கடுமையாகத் தாக்குவதும் தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடேயாகும். அதனை எந்த காலத்திலும் சிங்கள ராணுவம் கைவிடப்போவதில்லை. இந்திய ஒன்றிய அரசும், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைத்த தீர்வை எந்த காலத்திலும் பெற்றுத்தரப் போவதுமில்லை. ஆகவே, தமிழ்நாடு மற்றும் தமிழீழத் தமிழ் மீனவர்களும் எவ்வித சிறு பகைமைக்கும் இடமளிக்காமல், தங்களுக்குள் நிலவும் சிறு சிறு சிக்கல்கள் குறித்து திறந்த மனதுடன் அமர்ந்து பேசி, நிலையான தீர்வு காண முன்வர வேண்டும். அதன் மூலம், இருநாட்டு தமிழ் மீனவர்களிடையே பகையை உருவாக்கி, உருவெடுத்து வரும் இன ஓர்மையை சிதைக்க முயலும் இலங்கை இனவாத அரசின் திட்டமிட்டச் சதியை தமிழர்கள் ஒற்றுமையுடன் முறியடிக்க வேண்டும். தற்போது, தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள, மீனவர் அயந்தனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, விரைந்து தாயகம் திருப்பி அனுப்ப காவல் துறை மற்றும் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

images - 2026-08-25T094725.133

பள்ளி, கல்லூரி கட்டடங்களில் இனி 3 வகையான ஸ்டிக்கர்: ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட்

images - 2026-08-25T094908.235

மகளிர் இலவச பயணத்திட்ட விரிவாக்கம்: பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி வரவேற்பு!

August 25, 2026

சென்னை: ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவாக்கம் தமிழகத்தில் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள மகளிர் கட்டணமில்லாப் பயணத்

images - 2026-08-25T093908.642

அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடவேண்டுமா? கொந்தளித்த ஆ.ராசா

August 25, 2026

சென்னை: அமைச்சரின் பேச்சும் ஆ.ராசாவின் விமர்சனமும் காருக்கு தேசியக்கொடி வந்துவிட்ட காரணத்தால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என

bharathiraja-rajmohan-2026-08-24-20-55-52

பாரதிராஜாவுக்குத் தேனியில் மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்புகள்!

August 25, 2026

சென்னை: ரூ.2.50 கோடியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும் எனத் தமிழ் வளர்ச்சி

dailythanthi_2026-08-24_146dsz5y_Anbil-mahesh copy

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

August 25, 2026

சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முடிவு முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக

kasthuri-1-2024-11-0308395fba104cc334646f143d18f661-4x3

இடைத்தேர்தலில் த.வெ.க. வென்றால் காங்கிரஸ் கூட்டணி முறிய வாய்ப்பு: பா.ஜ.க. நிர்வாகி கஸ்தூரி

August 25, 2026

கும்பகோணம்: கஸ்தூரியின் கோயில் தரிசனமும் செய்தியாளர் சந்திப்பும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகி கஸ்தூரி, அங்குள்ள

U2-1024x620

“தைரியம் இருந்தால் அந்த மூன்று கோப்புகளை ஓபன் பண்ணுங்க!” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி சவால்

August 25, 2026

சென்னை: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘போராளி ஓய்வதில்லை’ என்ற தலைப்பில் தி.மு.க.

1200-675-27473574-thumbnail-16x9-megamalai

மேகமலை விவகாரம்: தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு!

August 25, 2026

தேனி: ஆட்சியரின் உத்தரவும் மக்களின் அதிர்ச்சியும் தேனி மாவட்டம், வருஷநாடு, மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராம மக்களை வெளியேற்றும்

hindutamil-prod_2026-08-24_3sbtyc61_IMGTRBRAJAA210ED3RG16

“விஜய்யின் ஈகோவுக்காகவே பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து!” – டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்

August 25, 2026

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைத் த.வெ.க. அரசு கைவிட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சென்னை அண்ணா

Eb2zWUlU0AE67ID

சாத்தான்குளம் வழக்கு: தூக்குத் தண்டனை கைதிக்கு 2 நாள் அவசர கால விடுப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

August 25, 2026

மதுரை: ரகு கணேஷுக்கு அவசர கால விடுப்பு சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று சிறையில்

cham

சமிந்த விஜேசிறிக்கு பிணை

August 25, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள்

Parliame

22ஐ சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல்

August 25, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள்