தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை எமக்கு நீதி கிட்டப் போவதில்லை

தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை தமிழர்களுக்கு நீதி கிட்டப் போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் நேற்று (30) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை” என சிங்கள பௌத்த அரசியல் நிலைப்பாட்டில் நின்று தற்போதைய அரசாங்கத்தின் நீதி அமைச்சர் கடந்த புதன்கிழமை (22) நாடாளுமன்றத்தில் கூறியதோடு அரசியல் கைதிகள் என்பதற்கான பொருள் கோடல் சிறைச்சாலை கட்டளை சட்டத்தில் இல்லை என நியாயம் கற்பித்திருப்பது தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் நிலைப்பாட்டினால் தொடர்ந்தும் தண்டிக்கப்படும் குற்றம் என்பதை நிரூபிக்கவே அன்றி வேறொன்றுமில்லை. இந்நிலைப்பாட்டினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளையும், அரசியல் கோரிக்கைகளையும் மதிக்காது 1972 மற்றும் 1978 அரசியல் யாப்புகள் கொண்டு வந்ததோடு தமிழ் தேச அரசியலை அழிக்கவும், ஒட்டுமொத்த தமிழர்களையும் (சிங்கள பௌத்த பேரினவாதிகளோடு கைகோர்த்தவர்கள் தவிர) அனைவரையும் பயங்கரவாதிகள், தேசத்துரோகிகள் என அடையாளப்படுத்தப்பட கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தினை தொடர்ந்தும் பாதுகாத்துக்கொண்டு சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் அரசியல் கைதிகள் தொடர்பாக பொருள் கோடல் இல்லை என்பது அரசியல் கேளிக்கூத்தாகும்.

யுத்தத்தினை நானே முடிவுக்கு கொண்டு வந்தேன் என மார்தட்டும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலும், இறுதி யுத்த நாட்களில் நானே நாட்டின் தலைமை பொறுப்பிலிருந்தேன் எனக் கூறும் மைத்திரியின் ஆட்சிக்காலத்திலும் அரசியல் கைதிகள் சமூகமயமாக்கப்பட்டனர். அது அவர்களின் அரசியல் தேவைக்காகவே அன்றி தமிழர்களின் அரசியல் நலனுக்காக அல்ல என்பதையும் கூற விரும்புகின்றோம்.

இறுதியாக தற்போதைய ஜனாதிபதி, பதவிக்கு வரும் முன்னர் தமிழர் தாயகத்தில் தனது தேர்தல் வாக்கு வேட்டை மேடைகளில் நின்று “நாம் பதவிக்கு வந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம்” என வாக்குறுதி அளித்து தமிழர்களின் வாக்குகளை கவர்ந்து பதவியில் அமர்ந்த பின்னர்; நீதி அமைச்சர் ஊடாக தனது நிலைப்பாட்டினை தெரிவிப்பதும் தனதும் தனது அரசாங்கத்தினாலும் நிலைப்பாட்டினை சிங்களவர்களுக்கு வெளிப்படுத்தவே. இது தேசிய மக்கள் சக்தியின் அரசியல்.

தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை தமிழர்களுக்கு நீதி கிட்டப் போவதில்லை என்பது வரலாற்று உண்மை. அரசியல் கைதிகளாக தமிழர்களால் அடையாளப்படுத்தப்பட்டோரின் விடுதலைக்காக தமிழர் தாயகத்திலும், தாயகத்திற்கு வெளியில் கொழும்பு நகரிலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.

நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் விடுதலைக் குரல்கள் எழுப்பப்பட்டன. அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக சாகும் வரையான உண்ணாவிரத போராட்டங்கள் செய்தும் எத்தகைய பலனும் கிட்டவில்லை.

இந்தப் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்கள் “ஜனாதிபதி அனுரகுமார அவர்களிடம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கும்பிட்டு கேட்டுவிட்டோம். அதைவிட வேறு எவ்வாறு கேட்பது” என பகிரங்கமாக கூறிய விடயம் தமிழர்களுக்கு வேதனை அளிக்கின்றது.

ரவிகரன் அவர்கள் மேற்கூறிய கூற்றினை கூறியதன் மூலம் எதனை எதிர்பார்த்தார் என்பதை விட இவ்விடயம் உண்மையாக இருக்குமாயின் அது தமிழர்களுக்கும், தமிழர்களின் அரசியலுக்கும், அரசியல் கைதிகளுக்கும் பலத்த அவமானமாகும். நாங்கள் கும்பிட வேண்டும் அவர்களின் காலடியில் விழ வேண்டும் என்பதே சிங்கள பேரினவாதத்தின் விருப்பமாகும்.

மீண்டும் மீண்டும் கூறுகின்றோம். தமிழர்களின் விடுதலை அரசியல் செயற்பாட்டில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி தற்போதும் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஆக்கப்பூர்வமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கான சட்ட திருத்தங்களை செய்யுங்கள். அரசியல் ரீதியில் போராடி சிறைகளில் நீண்ட காலம் வாடுவோரை பாதுகாக்கவும் அவர்களின் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்கின்றோம்.

உங்கள் அரசியல் தேவைக்காக உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்காக எடுக்கின்ற முயற்சிக்குள் சட்டத்துறை அதன் சுயாதீனம் சிக்கி இருக்கின்ற அவல நிலையினை முழு நாடும் அறிந்ததே. இத்தகைய நிலையிலும் உங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக துடித்துக்கொண்டிருக்கும் நீங்கள் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினையை தீர்ப்பதற்கு அதன் முன்னோடியாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான சட்ட திருத்தங்களை சடுதியாக மேற்கொள்வது நாட்டிற்கும் நாட்டின் அரசியல் எதிர்காலத்துக்கு மட்டுமல்ல நாட்டின் சுபீட்சத்திற்கும் வழிவகுக்கும் என்பதையும் கூற விரும்புகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு