“தமிழகத்தில் ஒரே வாரத்தில் ஊழல் ஒழிந்தது!” – தவெக அரசின் 60 நாள் அதிரடித் திட்டம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்!

சென்னை:

“தமிழ்நாட்டில் புதிய தவெக அரசு பொறுப்பேற்ற ஒரே வாரத்தில் பல்வேறு துறைகளில் நிலவி வந்த ஊழல்கள் ஒழிக்கப்பட்டுள்ளன; இன்னும் 60 நாட்களில் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் முழுமையாக மாற்றி காட்டுவோம்” என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, புதிய தவெக அரசின் சாதனைகள், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் ஆ.ராசாவின் சர்ச்சை பதிவு உள்ளிட்ட பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்துப் பரபரப்பான விளக்கங்களை முன்வைத்தார். அவர் பேசியதாவது:

“ஆளுநர் மாளிகையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் 3-ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டது குறித்துப் பதவியேற்பு விழாவின் முதல் நாளே முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து சுமார் 5 நிமிடங்கள் மிகக் காரசாரமாகப் பேசினார். ‘எங்கள் கட்சியின் பெயரே தமிழக வெற்றிக் கழகம், எங்களுக்குத் தமிழ் தான் எப்போதுமே முதன்மை’ என்பதைத் தலைவர் விஜய் ஆணித்தரமாகக் குறிப்பிட்டார். ஆனால், தங்களுக்கு டெல்லியில் இருந்து ‘வந்தே மாதரம்’ பாடலைத் தான் முதலில் பாட வேண்டும் எனச் சுற்றறிக்கை (Circular) வந்திருப்பதாக ஆளுநர் தெரிவித்துவிட்டார். ச. ஜோசப் விஜய் என்ற தனது முழுப் பெயரைச் சொல்லி ஓட்டுக் கேட்டு, தமிழ்நாட்டில் மத அரசியலைத் தவிடுபொடியாக்கி எறிந்துள்ளார் எங்கள் தலைவர். தமிழ்நாட்டு மக்களும் சாதி, மத அரசியலை முற்றிலும் தூக்கி எறிந்துள்ளனர். ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதால், உண்மையாக இன்று தான் தமிழ்நாட்டின் சமூக நீதி நாள் ஆகும். இத்தகைய சமூகநீதி அடிப்படையிலான அமைச்சரவையை ஒட்டுமொத்த இந்தியாவே வியந்து பார்க்கிறது, தமிழக மக்கள் கொண்டாடுகின்றனர்.

புதிய அரசு பொறுப்பேற்ற இந்த 60 நாட்களில் அனைத்தையும் நாங்கள் மாற்றி காட்டுவோம். மிக பிரம்மாண்டமான நிர்வாக மாற்றம் தமிழ்நாட்டில் இருக்கப் போகிறது. முந்தைய ஆட்சியில் பல்வேறு அரசுத் துறைகளில் சுமார் 35% வரை வசூலிக்கப்பட்டு வந்த ‘கட்சி நிதி’ (Party Fund) முறையை எங்களது தவெக அரசு ஒரே வாரத்தில் முற்றிலும் ஒழித்துக் கட்டியுள்ளது. இனிமேல் சாலை தார் போடாமல் போட்டதாகப் பொய் பில் போட்டுப் பணம் எடுக்க முடியாது. பினாமி பில் (Benami Bills) முறையை முழுமையாக ஒழிப்போம். துறைகளில் உள்ள அனைத்துத் தவறுகளையும் கண்டறிந்து வருகிறோம், விரைவில் பெரும் மாற்றம் வரும். தமிழகத்தில் ஒரே வாரத்திலேயே ஊழல் ஒழிந்துவிட்டது.

அதிமுக-வின் 25 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை மட்டும் நாங்கள் பெற்றிருந்தால் மிக எளிதாக எங்களால் ஆரம்பத்திலேயே ஆட்சியமைத்திருக்க முடியும். ஆனால், எங்களது மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளில் தவெக அரசு மிகவும் உறுதியாக இருந்தது. அதனால்தான், அதே மதச்சார்பற்ற கொள்கைகளைக் கொண்ட தோழமைக் கட்சிகளை ஒன்றிணைத்துக் கூட்டணி அரசை அமைத்தோம். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளில் தவெக அரசு என்றும் உறுதியாக இருக்கும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் இந்தத் தேர்தலில் தங்களது கட்சி ஏன் படுதோல்வி அடைந்தது என ஆராய்வதற்கு 36 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறார்கள். பாவம், அவர்களுக்கு இன்னும் தாங்கள் ஏன் தோற்றோம் என்ற உண்மைக் காரணமே தெரியவில்லை. அரசியலில் ஒரு கட்சியை அல்லது ஒரு தலைவரை விமரிசிக்கும் போதெல்லாம் பெண்களை நோக்கியே அநாகரிக விமரிசனங்களை உருவாக்குவது திமுக-வின் வாடிக்கையாகிவிட்டது. அப்படித்தான் திமுக எம்பி அண்ணன் ஆ.ராசா அவர்கள், வாயால் சொல்லவே தயங்கும்படியான ஒரு மோசமான பதிவை எக்ஸ் தளத்தில் இட்டிருக்கிறார். பெண்ணுடைய உறவை மையப்படுத்தி ஒரு தலைவரை விமரிசிப்பது பெரியாரும் அண்ணாவும் கற்றுக் கொடுத்த பாடம் அல்ல. திமுக அடிக்கடி மேடைகளில் சொல்லும் ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்ற மூன்றுமே தற்போது அவர்களிடம் துளியும் இல்லை. ஆ.ராசாவின் இந்த அநாகரிகப் பதிவை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் விசிக தலைவர் திருமாவளவனிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேடைகளில் குரல் கொடுக்கும் கனிமொழி எம்.பி ஏன் இந்த விவகாரத்தில் இன்னும் மௌனம் காக்கிறார்? இதையும் அவர் கண்டிக்க வேண்டும். பொதுவெளியில் இது போன்ற அவதூறுச் சொற்களைப் பயன்படுத்துகிறவர்கள் மீது புகார் கொடுத்தவுடன் உடனடியாகச் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழகக் காவல்துறையையும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

அறநிலையத்துறைக்கு இந்த குறிப்பிட்ட சாதியில் இருந்து தான் அமைச்சரை நியமித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்களில் திட்டமிட்டுத் தவறான பிரச்சாரங்களைச் செய்து வருகிறார்கள். ரமேஷ் அவர்களைத் தலைவர் விஜய் அமைச்சர் ஆக்கும் வரை, அவர் என்ன சாதி என்றே எங்களது கட்சியில் யாருக்கும் தெரியாது. சாதி பார்த்து தவெக யாரையும் முன்னிறுத்தவில்லை. அதேபோல், இன்னொரு அமைச்சரின் துறை பற்றி நான் பேசுவது அரசியல் மரபு ஆகாது. எனினும், மின்சாரத் துறையில் முந்தைய அரசால் பெருமளவு கடன் சுமை ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், நிலக்கரி கொள்முதலில் மிகப்பெரிய ஊழல்கள் நடந்திருப்பதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொல்லியிருக்கிறார். அவர் தற்போது அதை முழுமையாக ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். மக்கள் நலனுக்காகத் தினம் 18 மணிநேரத்திற்கு மேலாக அவர் உழைத்து வருகிறார். அந்தந்த அமைச்சர்கள் தங்களது துறை சார்ந்து விரைவில் விரிவான விளக்கம் அளிப்பார்கள்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

#AadhavArjunaSpeech #PWD_MinisterTN #TVK_GovernmentUpdates #BreakingNews #May22 #CorruptionFreeTN #60DaysChallenge #ThalapathyVijay #NewGovernmentTN #TamilThaiVazhthuIssue #ARajaControversy #SocialJusticeTN #AntiCorruptionDrive #DMK_Defeat2026 #KanimozhiSilence #VelamaniSupport #PeriyarAnnaPrinciples #SecretariatTN #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_“`

trai

ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு; வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

May 31, 2026

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியதே

vick

பிரான்ஸில் சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: 400 பேர் கைது

May 31, 2026

சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர்

Breast can

இலங்கையில் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் அதிநவீன இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

May 31, 2026

நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும்

arre

மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே தூக்கி அதிரடி காட்டிய ’பைக் ரேஸர்கள்’ கைது!

May 31, 2026

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில், கதான மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே

pala

பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

May 31, 2026

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர். பலாலி வீதியில்

ble

‘நீல நிலா’ இன்றிரவு வானில் தோன்றும் அதிசயம்

May 31, 2026

இன்று (31) வானில் அரிய விண்வெளி நிகழ்வான ‘நீல நிலா’ (புளூ மூன்) தோன்ற உள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில்

canada road11

மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பெண் பலி

May 31, 2026

சனிக்கிழமை இரவு மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் (Highway 401) ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர்

canada police2555

‘நெஞ்சை உலுக்கும் சம்பவம்’: டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சாலையைக் கடந்த பாதசாரி விபத்தில் பலி

May 31, 2026

டொராண்டோவின் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட்டில் (Eglinton Ave. West) வாகனம் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்தது குறித்து டொராண்டோ காவல்துறை

accused

மரண வழக்கின் விசாரணைக்காக காத்திருந்த நபர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக (Stunt Driving) மீண்டும் வழக்குப்பதிவு

May 31, 2026

2024 ஆம் ஆண்டு நடந்த விபத்து மரண வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காத்திருக்கும் உட்ஸ்டாக் (Woodstock) நகரைச்

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என