உலக சந்தை மற்றும் உள்நாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலை திடீர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதற்கமைய, உலக சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
உலக சந்தையின் திடீர் விலை வீழ்ச்சி இலங்கையிலும் தங்கத்தின் விலையில் மாற்றத்தை பதிவு செய்துள்ளது.
இதன்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரப்படி, இன்று (20) 7,000 ரூபாயினால் குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 345,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 317,400 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 352,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 323,800 ரூபாயாகவும் விற்பனையாகியுள்ளது.