ஜெர்மன் யுவதியிடம் அத்துமீறிய தொல்பொருள் திணைக்கள ஊழியருக்கு விளக்கமறியல்!

அநுராதபுரம், மிஹிந்தலை ரஜமஹா விகாரையைப் பார்வையிடச் சென்ற ஜெர்மன் நாட்டு இளம் யுவதியொருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தொல்பொருள் திணைக்கள ஊழியரை, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்பதும், அவர் மிஹிந்தலை தொல்பொருள் திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

சுற்றுலாப் பயணமாக இலங்கை வந்துள்ள குறித்த ஜெர்மன் நாட்டு யுவதி, அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளிலுள்ள புனித தலங்களைப் பார்வையிடுவதற்காகச் சென்றுள்ளார்.

மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் ‘கந்தக சைத்திய’ பகுதிக்குச் செல்லும் வழியில் அமர்ந்து அவர் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த வேளையில், சந்தேகநபர் எதிர்பாராத விதமாகப் அவரைப் பலவந்தமாகப் பிடித்துத் துன்புறுத்தியுள்ளார்.

அச்சமயம் விகாரைக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் அங்கிருந்த சிவில் பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயற்பட்டு சந்தேகநபரைத் தப்பவிடாமல் பிடித்தனர். பாதிக்கப்பட்ட யுவதியைக் காப்பாற்றிய அவர்கள், சந்தேகநபரை மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பாதிக்கப்பட்ட யுவதியும் சந்தேகநபரும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது, ஜெர்மன் நாட்டு யுவதியின் உடலில் 30-க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட சந்தேகநபர் அந்தச் சமயத்தில் கேரள கஞ்சா போதையில் இருந்தமையும் மருத்துவ அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு