ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பரப்பினார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரி இன்று (31) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சாரங்கள் தொடர்பாகப் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அது குறித்த விசாரணைகள் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான அதிகாரி, எம்பிலிப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் அலுவலகத்தில் இணைக்கப்பட்டுப் பணியாற்றியவராவார்.

சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி இன்று (31) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.

muh

ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

July 31, 2026

ஷ்ம் தீவில் ஒரு தம்பதியினரும் ஒரு குழந்தையும் கொல்லப்பட்டது, மற்றும் மினாப் மற்றும் லமெர்டில் நடந்த அட்டூழியங்களின் தொடர்ச்சிகளுக்காகவே ஈரான்

san

இந்தியாவிற்கு கடத்தவிருந்த 4,000 கடல் சங்குகள் கைப்பற்றல்

July 31, 2026

கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில், சட்டவிரோதமாகக் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்வதற்காகக் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 44 மூட்டைகளைக் கொண்ட கடல்

MYLITY

அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை

July 31, 2026

மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலுடன் சில

je

இலங்கையில் மிக உயரமான இயேசு கிறிஸ்துவின் சொரூபம் !

July 31, 2026

இலங்கையிலேயே மிக உயரமான இயேசு கிறிஸ்துவின் சொரூபம், பேராயார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று (30) வியாழக்கிழமை

dol

200 மில்லியன் டொலர் நிதியுதவி!

July 31, 2026

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களுக்கு மத்தியில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக 200 மில்லியன்

f

சுதந்திரபுரம் பிரதான வீதி திறந்து வைப்பு!

July 31, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பிரதான வீதி, மக்கள் பயன்பாட்டிற்காக நேற்று வியாழக்கிழமை (30) போக்குவரத்து

cru

கச்சா எண்ணெய் விலை சரிவு

July 31, 2026

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (31) சற்று சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, WTI

cont

கொள்கலன் லொறிக்கு தீ

July 31, 2026

நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கொள்கலன் லொறிக்கு தீவைத்து சேதம்

deng

62 ஆக உயர்ந்தது டெங்கு மரணப் பட்டியல்!

July 31, 2026

நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின்

jud_1

நிறுவன இரகசியத்தை விற்ற குற்றத்திற்கு ரூ.50 மில்லியன் நட்டஈடு!

July 31, 2026

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான “உற்பத்தி இரகசியங்கள்” மற்றும் “வணிக இரகசியங்களை” நிதி இலாபத்திற்காக வேறு

easter bomb

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் ; ஹேமசிறி, பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று

July 31, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பிரனாந்து ,முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர

arrest

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது

July 31, 2026

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பரப்பினார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ்