சென்னை:
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், முந்தைய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என உறுதியளித்திருந்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், இன்று மகளிர் உரிமைத் தொகையை விடுவித்துத் தனது வாக்கை மெய்ப்பித்துள்ளார்.
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், கிராமப்புறப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றி வந்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பின் இத்திட்டம் தொடருமா என்ற அச்சம் நிலவியது. குறிப்பாக, இத்திட்டத்தை ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்குவதாகத் தவெக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இத்திட்டத்தை முழுமையாக மறுசீரமைப்பு செய்யக் கால அவகாசம் தேவைப்படுவதால், அதுவரை பயனாளர்களுக்குத் தங்குதடையின்றி நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இன்று (மே 15) வழக்கம் போலப் பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.1,000 உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று ‘புதுமைப்பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களுக்கான நிதியை விடுவித்திருந்த நிலையில், இன்று மகளிர் உரிமைத் தொகையும் வழங்கப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சொன்ன வார்த்தையைத் தவறாமல், திட்டங்களைச் செயல்படுத்தி வரும் முதல்வர் விஜய்யின் இந்த வேகம், அரசியல் வட்டாரத்தில் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ ஆகப் பார்க்கப்படுகிறது.
#MagalirUrimaiThogai #VijayAsCM #TVK_Government #BreakingNews #May15 #WomenEmpowerment #TamilNaduPolitics #PromisesKept #ThalapathyVijay #NewGovernmentTN #FinancialAid #SocialJustice #TN_Economy #PublicWelfare #UrimaiThogai #TamilNews #VijayMakkalIyakkam #FortStGeorge #CM_Vijay_Official_“`