செல்வச்சந்நிதியான் மகோற்சவ காலத்தில் லஞ்ச் சீற் பாவனை, புகையிலை பொருட்கள் விற்பனை, பச்சை குத்த முற்றாக தடை!

செல்வச்சந்நிதியானின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 12ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவ காலத்தில் ஆலய சூழலில் உணவு கையாளும் நிலையங்களில் லஞ்ச் சீற் பாவனை, புகையிலை சார்ந்த பொருட்கள் விற்பனை மற்றும் பச்சை குத்தும் செயற்பாட்டிற்கும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை மீறி செயற்படுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஸ் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் விடுக்கப்பட்டுள்ள பொதுச்சுகாதாரம் சார்ந்த பொது அறிவுறுத்தல்கள் வருமாறு,

1. உணவு கையாளும் நிலையங்கள் (உணவகங்கள், இனிப்பு கடைகள், மிக்சர் கடைகள், ஐஸ்கிறீம் கடைகள், காரம்சுண்டல், தும்புமிட்டாய், ஏனையவை) தத்தமது உள்ளூராட்சி மன்றங்களின் நடப்பாண்டிற்கான அனுமதியை பெற்றிருத்தல் வேண்டும்.

2. உணவு கையாளும் நிலையங்களில் கடமைபுரிபவர்கள், அன்னதான மடங்களில் கடமை புரிபவர்கள் மற்றும் தாகசாந்தி நிலையங்களில் கடமை புரியும் அனைவரும் நடப்பாண்டிற்கான மருத்துவ சான்றிதழ் வைத்திருப்பதுடன் தனிநபர் சுகாதாரம் பேணுவதனை உறுதிப்படுத்துதல் வேண்டும் என்பதுடன் தற்காலிக கடமையில் ஈடுபடுபவர்கள் தற்காலிக மருத்துவ சான்றிதழ் பெற வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச் சுகாதார பரிசோதகரினை தொடர்பு கொள்ளவும்.

3. தண்ணீர்ப்பந்தல்கள், சர்பத் கடைகள் மற்றும் ஐஸ்கிறீம் கடைகள் நடாத்துபவர்கள் அனுமதி பெறப்பட்ட கடைகளில் நீர்ப்பரிசோதனை அறிக்கை வைத்திருப்பவர்களிடம் இருந்து ஐஸ்கட்டிகளை கொள்வனவு செய்வதுடன் அதற்கான பற்றுச்சீட்டினையும் தம்வசம் வைத்திருத்தல் வேண்டும்.

4. ஆலயத்தினது சுற்றாடலில் புகையிலை சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதும் பயன்படுத்துவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

5. வர்த்தக நிலையங்கள், அன்னதான மடங்கள், தண்ணீர் பந்தல்களில் பயன்படுத்தப்படும் நீரானது குடிக்கத்தகுந்தது (நீர்ப்பரிசோதனை அறிக்கை) என்பதனை உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்பதுடன் தவறும் பட்சத்தில் நகராட்சி மன்றத்தினால் வழங்கப்படும் குடிநீரினை மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.

6. பொதுச்சுகாதாரம் சார்ந்த விடயங்கள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை உற்சவ கால சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

7. வர்த்தக நிலையங்கள் மற்றும் மடங்களிலும் தண்ணீர் பந்தல்களிலும் இருந்து வெளியேறும் திண்மக்கழிவுகளை குப்பைத்தொட்டி கொண்டு தரம்பிரித்து ஓரிடத்தில் சேகரிப்பதுடன் அதனை உரியமுறையில் அகற்றுவதனை உறுதிப்படுத்தப்படலும் வேண்டும்.

8. ஆலயச் சூழலில் லஞ்சீற் மற்றும் பிளாஸ்திக் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் மீறுபவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

9. பச்சை குத்துதல் செயற்பாடுகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

10. காவடி குத்துபவர்கள் நகராட்சி மன்றத்தின் நடப்பாண்டிற்கான வியாபார அனுமதிப்பத்திரம் பெற்றிருத்தல் வேண்டும் என்பதுடன் தொற்றுநீக்கும் வசதியும் ஏற்பாடு செய்திருத்தல் வேண்டும்.(உபகரணங்கள் கொதிநீரிலிட்டு தொற்றுநீக்கும் வசதிகள்)

11. குத்தகைக்கு வழங்கப்படும் நிலங்கள் திருவிழா முடிவடைந்ததும் சுத்தமாக பேணப்படுவது ஆதன உரிமையாளரின் பொறுப்பாகும்.

12. பொதுச்சுகாதாரம் தொடர்பான சட்ட ஏற்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ac

கோர விபத்தில் இளம் தம்பதியினர் பலி

October 10, 2026

கம்பஹா – கிரிந்திவலை 231 ஆம் இலக்க பேருந்து பாதையில், ஹேனேகம சந்தியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்

Arju

பிரபாகரனால் முடியாததை நீங்கள் செய்கிறீர்கள்; ஷிராந்தியை உள்ளே போட்டதற்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

October 10, 2026

மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்‌ஷவைச் சிறையில் அடைத்தமைக்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்; ஆனால், நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். எமது

thaya

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் கறுப்பு ஜூலை கலவரம் தோற்றுவிக்கப்பட்டது!

October 10, 2026

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இறுதியில்

v

பதுளை விபத்தில் விமானப்படை அதிகாரி உயிரிழப்பு

October 10, 2026

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கை விமானப்படையின் பயிற்சிப்

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.