செம்மணியில் மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட என்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
மழை அங்கியும், அதனுடன் மீட்கப்பட்ட பொத்தான்களும், காலுறையும் சான்று பொருளாக அடையாளப்படுத்தப்பட்டு, நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் கடந்த 23.07.2026 அன்று மேற் கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் மழைக் கவசத்துடன் (Raincoat) ஒரு சிறுவருடைய எலும்புக்கூட்டு அடையாளம் காணப்பட்டது.
குறித்த எலும்புக்கூட்டின் கால் பகுதியில் காலுறையும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த எலும்புக்கூட்டினை சூழ மரப்பலகை உக்கிய நிலையில் காணப்படுகிறது. அதன்படி அந்த பலகை சவப்பெட்டியாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.