மிசிசாகா மேயர் தேர்தலுக்கான அண்மைக்காலக் கருத்துக்கணிப்பில், ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட்டின் (Doug Ford) ஆதரவு இருந்தபோதிலும், தற்போதைய மேயர் கரோலின் பாரிஷ் (Carolyn Parrish) மற்றும் முன்னாள் மேயர் பாஃனி குரோம்பி (Bonnie Crombie) ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகக் காட்டுகிறது.
லைசன் ஸ்ட்ராட்டஜிஸ் (Liaison Strategies) நிறுவனம் நடத்திய புதிய கருத்துக்கணிப்பின்படி, முடிவெடுத்த மற்றும் ஒரு பக்கமாகச் சாயக்கூடிய வாக்காளர்களிடையே கரோலின் பாரிஷ் மற்றும் பாஃனி குரோம்பி ஆகிய இருவரும் தலா 35 சதவீத ஆதரவைப் பெற்று சமநிலையில் உள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக வேட்பாளர்கள் தீபிகா டாமர்லா (Dipika Damerla) 18 சதவீத ஆதரவையும், ஆல்வின் டெட்ஜோ (Alvin Tedjo) 12 சதவீத ஆதரவையும் பெற்றுள்ளனர்.
நகரத்தின் தற்போதைய போக்கைக் குறித்து 46 சதவீத மக்கள் எதிர்மறையான கருத்துக்களையும், 32 சதவீத மக்கள் நேர்மறையான கருத்துக்களையும் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.