இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) இன்று காலை 10.00 மணிக்கு வெளியிட்ட நிலைமை அறிக்கையின்படி, மட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்குப் பகுதியிலேயே இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
இரத்தினபுரி, காலி, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 62 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 203 பேர் இந்த மோசமான காலநிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 07 குடும்பங்களைச் சேர்ந்த பதினேழு (17) நபர்கள் தற்காலிகப் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக 39 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், ஒரு சிறு/நடுத்தர அளவிலான தொழில் முயற்சி சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.