சிவப்பு + மஞ்சள் = காவி என்பது உறுதியாகிவிட்டது: தவெக அரசை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்!

சென்னை:

நீட் தேர்வு மற்றும் இ.டபிள்யூ.எஸ் (EWS) இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தித் திராவிடர் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த இருசக்கர வாகன பேரணிக்குத் தவெக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆளும் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். திராவிடர் கழகம் சார்பில் இன்று சென்னை வேப்பேரியில் மாபெரும் இருசக்கர வாகன பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இதற்குத் தமிழகக் காவல்துறை அதிரடியாக அனுமதி மறுத்ததுடன், பெரியார் திடலில் நூற்றுக்கணக்கான போலீசாரும் குவிக்கப்பட்டனர். அரசின் இந்தச் செயல் திராவிட இயக்கங்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீட் மற்றும் EWS இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசை விடத் தவெக அரசுதான் அதிகம் மிரளுகிறது. தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் என மேடைகளில் சொந்தம் கொண்டாடும் தவெக அரசு, தற்போது பெரியார் திடலிலேயே காவல்துறையைக் குவித்திருப்பது ஏன்? திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரை பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதை செய்கிறார்கள்?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், “கடந்த காலங்களில் இதேபோன்று மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு பல போராட்டங்களைத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது. அத்தகைய மாபெரும் இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்திற்குரியது. சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது\” என்று தவெக கொடியின் நிறங்களைக் குறிப்பிட்டு, அவர்கள் பாஜக-வின் பிம்பமாகச் செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு ஆசிரியர் கி.வீரமணியின் பரப்புரைப் பயணத்திற்கு உரிய அனுமதியைத் தவெக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, தங்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்துப் பேசிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், இதனைச் சட்டரீதியாக அணுகுவோம் என்றும், தடையை மீறி மாபெரும் பேரணியை நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளார். இதனிடையே, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தவெக அரசைக் கண்டித்து, திமுக சார்பில் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசியல் ரீதியாகத் தவெக அரசுக்கு எதிராகத் திமுக தற்போது தீவிரமான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது அரசியல் களத்தில் அனலைக் கூட்டியுள்ளது.

#MKStalin #TVK #CmVijay #DravidarKazhagam #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #PeriyarThidal #DmkNews #PoliticalUpdate #NEETProtest #TamilNewsLive

MYLITY

அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை

July 31, 2026

மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலுடன் சில

je

இலங்கையில் மிக உயரமான இயேசு கிறிஸ்துவின் சொரூபம் !

July 31, 2026

இலங்கையிலேயே மிக உயரமான இயேசு கிறிஸ்துவின் சொரூபம், பேராயார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று (30) வியாழக்கிழமை

dol

200 மில்லியன் டொலர் நிதியுதவி!

July 31, 2026

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களுக்கு மத்தியில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக 200 மில்லியன்

f

சுதந்திரபுரம் பிரதான வீதி திறந்து வைப்பு!

July 31, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பிரதான வீதி, மக்கள் பயன்பாட்டிற்காக நேற்று வியாழக்கிழமை (30) போக்குவரத்து

cru

கச்சா எண்ணெய் விலை சரிவு

July 31, 2026

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (31) சற்று சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, WTI

cont

கொள்கலன் லொறிக்கு தீ

July 31, 2026

நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கொள்கலன் லொறிக்கு தீவைத்து சேதம்

deng

62 ஆக உயர்ந்தது டெங்கு மரணப் பட்டியல்!

July 31, 2026

நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின்

jud_1

நிறுவன இரகசியத்தை விற்ற குற்றத்திற்கு ரூ.50 மில்லியன் நட்டஈடு!

July 31, 2026

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான “உற்பத்தி இரகசியங்கள்” மற்றும் “வணிக இரகசியங்களை” நிதி இலாபத்திற்காக வேறு

easter bomb

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் ; ஹேமசிறி, பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று

July 31, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பிரனாந்து ,முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர

arrest

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது

July 31, 2026

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பரப்பினார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ்

5

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைகிறேனா? ஓபிஎஸ் தரப்பு விளக்கம்!

July 31, 2026

சென்னை: சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளியான தகவல்களை அவரது தரப்பு

4

வடலூர் வள்ளலார் பன்னாட்டு மைய திட்டம் கைவிடப்பட்டது வரவேற்புக்குரியது – அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

July 31, 2026

சென்னை: வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள சத்திய ஞானசபை வளாகத்துப் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாகச் சென்னை