சித்திரவதைகளுக்கு எதிரான ஐநா குழு அரசாங்கத்திடம் இரகசிய அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது

சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் துணைக் குழுவின் (SPT) தூதுக்குழு, இலங்கைக்கு மேற்கொண்ட ஒன்பது நாள் விஜயத்தின் போது கண்டறிந்த விபரங்களின் அடிப்படையில், தனது இரகசிய முதற்கட்ட அவதானிப்புகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தூதுக்குழு தனது இலங்கை விஜயத்தை புதன்கிழமை நிறைவு செய்யவுள்ளது.

நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்தத் தூதுக்குழு, ஜூன் 15ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததிலிருந்து, பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு விஜயம் செய்துள்ளதுடன், 2019ஆம் ஆண்டு இக்குழுவின் இறுதி விஜயத்திற்குப் பின்னர் நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களை மதிப்பீடு செய்வதற்காக அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதன் முக்கிய சந்திப்புகளில் ஒன்று இந்த வாரம் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இதில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் கலந்துகொண்டனர்.

சித்திரவதைகள் தொடர்பான பல விடயங்கள் குறித்து ஐநா குழுவினர் கேள்விகளை எழுப்பியதுடன், 2024ஆம் ஆண்டின் இறுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஹேரத் தூதுக்குழுவிற்கு விளக்கமளித்தார்.

சித்திரவதைகள் மற்றும் ஏனைய கொடூரமான, மனிதநேயமற்ற அல்லது அவமதிப்பான நடாத்துகை அல்லது தண்டனைகளுக்கு எதிரான உடன்படிக்கையின் விருப்பத்திற்குரிய நெறிமுறையின் (OPCAT) 16ஆவது விதியின்படி, இக்குழு தனது இரகசிய முதற்கட்ட அவதானிப்புகளை இலங்கை அரசாங்கத்திற்கும், தேசிய தடுப்பு பொறிமுறைக்கும் வழங்கும் என மனித உரிமைகளுக்கான ஐநா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) அறிக்கை தெரிவிக்கிறது.

இதனைத் தொடர்ந்து, இத்தூதுக்குழு தனது கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய இரகசிய அறிக்கை ஒன்றை இலங்கைக்கு தயாரித்து வழங்கும். OPCAT கட்டமைப்பின்படி, இலங்கை அதிகாரிகள் அதனை பகிரங்கப்படுத்துமாறு கோரும் வரை இந்த அறிக்கை இரகசியமாகவே இருக்கும். 2019ஆம் ஆண்டு இக்குழு இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கை இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை 2017ஆம் ஆண்டில் OPCAT நெறிமுறையை ஏற்றுக்கொண்டது. இதன் கீழ், இக்குழு எந்தவொரு உறுப்பு நாட்டுக்கும் விஜயம் செய்ய முடியும் என்பதுடன், நபர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்ட அல்லது பறிக்கப்படக்கூடிய இடங்களுக்கு முன்னறிவிப்பின்றிச் சென்று சோதனையிட முடியும். ஒவ்வொரு விஜயத்தின் போதும், இக்குழுவினர் அரசாங்க அதிகாரிகள், தேசிய தடுப்பு பொறிமுறையின் உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய ஐநா முகவர் அமைப்புகளைச் சந்தித்துக் கலந்துரையாடுகின்றனர்.

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்