சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ்தெரிவு!

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு  இன்று (28) செவ்வாய்க்கிழமை  காலை நடைபெற்ற  போதே கோகுல்ராஜ் தெரிவானார்.

சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் ஞா.கிசோர் , உள்ளூராட்சி ஆணையாளரால் விடப்பட்ட சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி வீசியமை தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய முன்னாள் உப தவிசாளர் பதவியும் அவரது சபை உறுப்புரிமையும்  கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி ஆளுநரால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வறிதாக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், இன்றைய தினம் புதிய உப தவிசாளர் தெரிவுக்காக சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.

அதன் போது தமிழரசு கட்சியின் சார்பிலும், ஜனநாயக தமிழ்தேசிய கட்சி சார்பிலும் இருவர் போட்டியிட்டனர்.

அதில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டவருக்கு, தமிழரசு கட்சியின் 6 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.

ஜனநாயக தமிழ்தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டவருக்கு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 06 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கட்சியின் ஒரு உறுப்பனரும் வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களும் வாக்களிப்பில் ஈடுபடாமல் நடுநிலை வகித்தனர்.  சாவகச்சேரி நகர சபையானது, 18 உறுப்பினர்களை கொண்ட சபையாகும்.

அதில் தமிழரசுக் கட்சியின் 06  உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் 06 உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  இரண்டு உறுப்பினர்கள், அதில் ஞா. கிசோரின் உறுப்புரிமை வறிதாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவரை உறுப்பினர் , தேசிய மக்கள் சக்தியின் மூன்று உறுப்பினர்கள், அதில் ஒருவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அதன் அடிப்படையில் அவர்களில் இரு உறுப்பினர்கள்.  ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு உறுப்பினர் என சபையில் தற்போது 16 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் , உப தவிசாளர் தெரிவுக்கான கூட்டத்திற்கு , 16 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அதேவேளை குறித்த உப தவிசாளர் தெரிவினை நடத்த இடைக்கால தடை விதிக்குமாறு வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் முன்னாள் உப தவிசாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் கோரிக்கையை மன்று நிராகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

XHMNWD52XI3N4U6HGGF7TXXYIY

சிறுமிக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக ஷெர்வுட் பார்க் நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

July 28, 2026

சிறுமி ஒருவருக்கு எதிராகப் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக ஷெர்வுட் பார்க் (Sherwood Park) பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது

757979515_893153420517649_5715581353310024185_n

ஒன்டாரியோ வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை: 19 பேர் கைது, $97 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

July 28, 2026

ஒன்டாரியோவின் மிகப்பெரிய போதைப்பொருள் புலனாய்வு நடவடிக்கைகளில் ஒன்றை அடுத்து, கனடிய அதிகாரிகள் 19 பேரைக் கைது செய்துள்ளனர். அத்துடன், தெருக்களில்

CANADA PASSPORT

போலி கனடிய பாஸ்போர்ட் இணையதளத்தை நடத்திய யோர்க் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு: பொலிஸார் தகவல்

July 28, 2026

னடிய அரசாங்கத்துடன் தொடர்புடையது போல் காட்டி, “ஏமாற்றும்” வகையில் கடவுச்சீட்டு (Passport) இணையதளத்தை நடத்தியதாகக் கூறப்படும் யோர்க் பிராந்தியத்தைச் (York

7JFWSDPFKFG4ZDWVNCBNCHIKCY

வோட்டர்லூவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது கடை மேலாளர் காயம் – பொலிஸார் தெரிவிப்பு

July 28, 2026

திங்கட்கிழமை இரவோடு இரவாக வோட்டர்லூவில் (Waterloo) இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் கடை மேலாளர் ஒருவர் காயமடைந்தமை குறித்து வோட்டர்லூ பிராந்திய

POLICE CANADA 111

ஹால்டன் பொலிஸார் தமது வரலாற்றிலேயே மிகப்பெரிய மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கையின் முடிவுகளை வெளியிடவுள்ளனர்

July 28, 2026

ஹால்டன் பிராந்திய பொலிஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய மனித கடத்தல் (Human trafficking) விசாரணை தொடர்பான முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளன.

5XSONJLBFZCXDNCH5UVBLEETRQ

1.7 மில்லியன் மக்கள் வாழும் இந்தப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரட்டிப்பாகியுள்ளன. அதற்கான காரணம் குறித்து காவல்துறை கூறுவது இதோ.

July 28, 2026

கனடாவின் குற்றக் தீவிரக் குறியீடு (Crime severity index) குறைந்துள்ளதாகவும், தீவிரக் குற்றங்களின் எண்ணிக்கை குறைவதே ஒட்டுமொத்த சரிவுக்குக் காரணம்

7

எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை திட்டவட்ட பதில்!

July 28, 2026

சென்னை: விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்ததில் எந்தவிதமான சட்டவிரோதமும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை

6

டெல்லி புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க வேண்டாம்! – வைகோ கோரிக்கை!

July 28, 2026

சென்னை: டெல்லியில் நடைபெறவுள்ள தமது புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு

images (19)

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ்தெரிவு!

July 28, 2026

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகர சபையின் உப

5

மேகதாது விவகாரம்: பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

July 28, 2026

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த அதிரடி

photo-collage.png (4)

செம்மணி மனித புதைகுழி பேரவலத்திற்கு யார் காரணமென்பது விசாரணைகளின் இறுதியிலேயே தெரிய வரும் – நீதி அமைச்சர்

July 28, 2026

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும்

s

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

July 28, 2026

இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும், தனியார் பட்டப்படிப்பு மையங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் துணை மருத்துவப் பட்டதாரிகள்