மாவீரர் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தலும், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் நேற்று நவம்பர் 24ஆம் திகதி பிற்பகல் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபையின் பொன்விழா மண்டபத்தில் நடைபெற்றது.
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மூன்று மாவீரர்களின் தந்தையான பொன்னையா பூபாலசிங்கம் பொதுச் சுடரை ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர்களின் பெற்றோரும் உரித்துடையோரும் மதிப்பளிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர் வடிவேல் ஸ்ரீபிரகாஸ், உப தவிசாளர் கோகுலன், அரசியல் செயற்பாட்டாளர் கந்தையா அருந்தவபாலன், நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர், சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் செ. மயூரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.