சென்னை:
முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ரத்த ஆறு ஓடுகிறது:
மைனாரிட்டி தவெக அரசின் ஆட்சியில் திரைப்படங்களில் வருவதுபோல கொலை வெறிக் காட்சிகளும் வன்முறை வெறியாட்டங்களும் தமிழக வீதிகள்தோறும் அரங்கேறி வருவதாக எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். வேளச்சேரி வடமாநிலத் தொழிலாளி கொலை, ஓமலூர் வாலிபர் படுகொலை, கிச்சிப்பாளையம் மூதாட்டி கொலை மற்றும் திருவொற்றியூரில் 6 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல சம்பவங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.
ரீல்ஸ் பேச்சு போதாது:
“வீட்டுக்கு வீடு விஜய் இருக்கிறார், அண்ணனாகப் பாதுகாப்பு கொடுப்பேன் என்று டயலாக் பேசுவது மட்டும் போதாது. நிஜமாகவே நல்லாட்சி கொடுப்பதற்குத் தெம்பும் திராணியும் தேவை,” எனக் குறிப்பிட்டுள்ள அவர், சாலைகளில் மனிதர்களை வெட்டி வீசி ரத்த ஆறு ஓடும் அவலம் தற்போதைய ஆட்சியில்தான் நடக்கிறது என்றார்.
காவல்துறை மீது சந்தேகம்:
அரசின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும், குற்றங்களைத் தடுக்கத் தவறிவிட்டு எதிர்க்காட்சிகள் மீது பழிபோடும் வேலையில் அமைச்சர்கள் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அப்பாவி மக்களைக் காக்கத் தமிழகக் காவல்துறை உடனடியாகச் சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
#EdappadiPalaniswami #EPS #LawAndOrder #CMVijay #TVKGovernment #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive