சாணக்கியன் தனக்கு எதிரான உண்மைகளை ஊடகங்கள் வெளிப்படுத்தினால் அவற்றை நசுக்க முயற்சிப்பவர் – அந்தனிசில் ராஜ்குமார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் அச்சுறுத்தப்பட்டனர். அதேபோன்றதொரு அடக்குமுறைச் சட்டத்தையே, அந்த அரசியல் பின்னணியில் இருந்து வந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று தமிழ் இளைஞர்களுக்கு எதிராகப் பயன்படுத்தி வருகின்றார் என ஈ.பி.டி.பி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஊடக சுதந்திரத்திற்காகவும் தமிழ்த் தேசியத்திற்காகவும் குரல் கொடுப்பது போலத் தோற்றமளிக்கும் சாணக்கியன், தனக்கு எதிரான உண்மைகளை ஊடகங்கள் வெளிப்படுத்தினால் அதே ஊடகங்களை நசுக்க முயற்சிப்பதாக ராஜ்குமார் தெரிவித்தார்.

“நிகழ்நிலை காப்புச் சட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் பேசிவிட்டு, தற்போது அதே சட்டத்தைப் பயன்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகங்கள் மற்றும் சுமார் 50 இளைஞர்களுக்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது ஊடக சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் செயலாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட 400 மில்லியன் ரூபாய் நிதியில் முறைகேடுகள் நடந்ததாகத் தான் இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவில் முறைப்பாடு செய்ததாலேயே, தன்னை சாணக்கியன் பழிவாங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“களுவாஞ்சிகுடியில் நான் சட்டபூர்வமாக நடத்தி வந்த மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் எரிபொருள் நிலையத்தை முடக்கச் செய்து, எனது தொழிலைப் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளார். இதனால் அந்தப் பகுதி மீனவர்களும் தற்போது பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதற்கு மாவட்ட அரசாங்க அதிபரும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

‘தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை’ என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டிய அவர், ராஜபக்ஷவின் அரசியல் பாணியிலேயே சாணக்கியன் செயற்படுவதாகக் கூறினார். மேலும், இளைஞர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி அச்சுறுத்தும் இவருக்கு, எதிர்வரும் தேர்தலில் இளைஞர் யுவதிகள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும், உணர்ச்சிவசப்பட்டு வாக்களிக்காமல் சிந்தித்துச் செயல்படுமாறும் அவர் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Happiness

2026 ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியீடு!

March 19, 2026

ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இன்று வியாழக்கிழமை (19) வெளியிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில், இலங்கை

ind

இந்தியாவில் இலங்கை உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான ஆளுமை விருத்தித் திட்டம்

March 19, 2026

இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் படி, இலங்கை தமிழ் மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகங்களை

ir

ஈரானிய கால்பந்து வீராங்கனைகள் நாடு திரும்பினர்

March 19, 2026

அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களை மீளப் பெற்றுக்கொண்ட ஈரானிய தேசிய மகளிர் கால்பந்து அணியின் ஐந்து வீராங்கனைகள், அணியின்

wi

மதுபானசாலையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

March 19, 2026

ஹாவாஎலிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த மூன்று பிள்ளைகளின் தந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்

Bram

கனேடிய தேசிய நிதி அறிக்கை சிறப்புத் துறையில் பிராம்ப்டன் நகரத்துக்கு விருது

March 19, 2026

பிராம்ப்டன், ஒன்டாரியோ (மார்ச் 18, 2026) – பிராம்ப்டன் நகரம், அரசு நிதி அலுவலர்கள் சங்கம் (GFOA) வழங்கும் கனடிய

Daugh

பெர்த் மற்றும் வெல்லிங்டன் மாவட்ட உட்கட்டமைப்பை விரிவுபடுத்தவும் மேம்படுத்த ஒன்டாரியோ அரசு சுமார் $29 மில்லியன் முதலீடு

March 19, 2026

ஒன்டாரியோ அரசு, பெர்த் மற்றும் வெல்லிங்டன் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற நீர்வழங்கல் உட்கட்டமைப்புகளை விரிவுபடுத்தவும் புதுப்பிக்கவும் சுமார் $29 மில்லியன்

Anthanisil

சாணக்கியன் தனக்கு எதிரான உண்மைகளை ஊடகங்கள் வெளிப்படுத்தினால் அவற்றை நசுக்க முயற்சிப்பவர் – அந்தனிசில் ராஜ்குமார்

March 19, 2026

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் அச்சுறுத்தப்பட்டனர். அதேபோன்றதொரு அடக்குமுறைச்

riv

பனங்காடு பால ஆற்றில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

March 19, 2026

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தற்போது அடையாளம்

pet

அறிவுறுத்தல்களை மீறினால் கடும் சிக்கல்

March 19, 2026

எரிபொருள் விநியோகம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறி செயற்படும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க

c

சீனப் பெண்கள் இருவர் 38,000 சிகரெட்டுகளுடன் கைது

March 19, 2026

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட 57 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரண்டு

CPC

உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு?

March 19, 2026

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் இம் மாத இறுதிக்குள் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படலாம்

sam

சம்மாந்துறை பிரதேச செயலாளர் மீது குற்றச்சாட்டு

March 19, 2026

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புகளைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.