நிர்வாகக் குறைபாடு காரணமாக பிரின்ஸ் ஆல்பர்ட் சீர்திருத்த மையத்திலிருந்து (Prince Albert Correctional Centre) தவறுதலாக விடுவிக்கப்பட்ட 30 வயதுடைய பிரெட்னர் வாஹ்பிஸ்டிக்வான் (Brednor Wahpistikwan) என்ற நபரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சஸ்காட்செவன் (Saskatchewan) அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆயுதங்கள் தொடர்பான பல குற்றச்சாட்டுகளின் கீழ் எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை இவர் காவலில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், கடந்த 2026 மே 28 அன்று இவர் தவறுதலாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
தற்போது சட்டவிரோதமான முறையில் தலைமறைவாக இருக்கும் இவர், ‘பிக் ஐலண்ட் கிரீ நேஷன்’ (Big Island Cree Nation) பகுதியுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
வாஹ்பிஸ்டிக்வான் 5 அடி 9 அங்குல உயரமும், 160 பவுண்ட் எடையும் கொண்டவர் என்பதுடன், கருப்பு நிற முடி, பழுப்பு நிற கண்கள் மற்றும் அவரது வலது கையில் ஒரு மருந்துப் புட்டி (Potion bottle) பச்சை குத்தலும், வலது உள்ளங்கையில் ஒரு இதய வடிவ பச்சை குத்தலும் காணப்படுகின்றன.
இவரைக் கண்டால் பொதுமக்கள் யாரும் நெருங்க வேண்டாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனே பொலிஸாரையோ, ஆர்.சி.எம்.பி (RCMP) பிரிவையோ அல்லது ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ (Crime Stoppers) அமைப்பையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.