சர்வதேச தரநிலைகள் 3 வாரங்களில் முழுமையான தயார்நிலை!

நிதித் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதைத் தடுக்கும் (AML/CFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பான இலங்கையின் மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டிற்காக, அமைச்சுக்கள் மற்றும் நிறுவன மட்டங்களில் பரிந்துரைகள் மற்றும் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இதன்போது விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, நாடு எதிர்கொண்டுள்ள அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் மற்றும் நிறுவன ரீதியான மறுசீரமைப்புகளை மேற்கொள்வது வெளித்தரப்பினரின் அழுத்தங்களுக்காக அல்லாமல், நமது நாட்டின் சொந்த நிறுவனக் கட்டமைப்பின் நன்மைக்காகவே செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இச்செயற்பாடுகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது தாமதங்கள் இருப்பின் அவற்றை உடனடியாகத் திருத்தி, எதிர்வரும் 3 வாரங்களுக்குள் அரசாங்கமும் நிறுவன கட்டமைப்பும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

இலங்கை மத்திய வங்கியின் நிதி உளசவறிதல் பிரிவினால் ஒருங்கிணைக்கப்படும் இந்தச் செயன்முறையில், தொழில்நுட்ப இணக்கப்பாடு மற்றும் செயல்திறன் குறித்த விபரங்கள் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தப்பட்டன.

குறிப்பாக, குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தைச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டுவருதல், கம்பனிச் சட்டம் மற்றும் அதன் செயற்பாடுகள், நம்பிக்கைப் பொறுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல் போன்ற முக்கிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது ஆழமாக ஆராயப்பட்டது.

சர்வதேச நிதிக்கட்டமைப்பில் இலங்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் இந்த மதிப்பீட்டுச் செயன்முறையை வெற்றிகரமாக்குவதற்கு அனைத்து அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தீவிரப் பங்களிப்பு அவசியம் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதுவரை இப்பணிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், நீதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

a

சிறைச்சாலை விதிமுறைகளின்படி சிறை ஆடை கட்டாயம்!

October 7, 2026

சிறைச்சாலை விதிமுறைகளின்படி, 3 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் சிறைச்சாலையினால் வழங்கப்படும் சிறை ஆடையை அணிந்தே நீதிமன்றத்தில்

an

சர்வதேச தரநிலைகள் 3 வாரங்களில் முழுமையான தயார்நிலை!

October 7, 2026

நிதித் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதைத் தடுக்கும் (AML/CFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பான இலங்கையின் மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை

kachc

கச்சத்தீவு மற்றும் கடற்தொழில் உரிமைகள்; மீண்டும் பரிசீலிக்கும் எண்ணம் இல்லை!

October 7, 2026

கச்சத்தீவு மற்றும் கடற்தொழில் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்களை மீண்டும் பரிசீலிக்கும் அல்லது திறக்கும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்றும்,

8

“காங்கிரஸ் கூட சேர்ந்தவங்க யாரும் உருப்படவே முடியாது!” – தவெக – காங்கிரஸ் கூட்டணி குறித்துத் தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனம்!

October 6, 2026

“‘சென்னை: ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதைக் கடுமையாக விமர்சித்துள்ள பாஜக மூத்த தலைவர்

7

“வைரலாகும் வீடியோ ஜோடிக்கப்பட்டது!” – தேர்தல் செலவு சர்ச்சை குறித்துத் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா அதிரடி விளக்கம்!

October 6, 2026

தாராபுரம்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் பி. சத்தியபாமா, தேர்தல் செலவினங்கள்

6

“செவிலியர்கள் மீதான பாசிச தாக்குதல் கொடூரத்தின் உச்சம்!” – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

October 6, 2026

சென்னை: பணி நிரந்தரம், வேலைப் பாதுகாப்பு மற்றும் சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் அறவழியில்

chennai-mtc-bus-viral-video

“பயணிகளை ஆபாசமாகத் திட்டி அட்டகாசம்!” – அரசுப் பேருந்தில் குடிபோதையில் இருந்த இளம் பெண்ணால் பெரும் பரபரப்பு!

October 6, 2026

தமிழ்நாடு: அரசுப் பேருந்து ஒன்றில் மதுபோதையில் ஏறிய இளம் பெண் ஒருவர் சக பயணிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டு அட்டகாசம்

4

“தாராபுரம் தவெக வேட்பாளர் மீது திமுக அதிரடி புகார்!” – ரூ.31 கோடி செலவிட்டதாக வைரலாகும் வீடியோவால் தேர்தல் களத்தில் பரபரப்பு!

October 6, 2026

சென்னை: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் பி. சத்தியபாமா, தேர்தல் செலவினங்களை

3

“இதென்ன தாய்மாமன் தடியடி திட்டமா?” – செவிலியர்கள் கைது நடவடிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

October 6, 2026

சென்னை: பணி நிரந்தரம், வேலைப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டமைக்குத்

2

“100 பவுன் நகையைப் பறிகொடுத்த யூடியூபர் மதுமிதா மீது நகைத்திருட்டு வழக்கு!” – 89 வயது முதியவர் அளித்த புகாரின் பேரில் அதிரடி நடவடிக்கை!

October 6, 2026

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மதுமிதா மீது, 89 வயது முதியவர் ஒருவரிடம் 5 பவுன் தங்க

1

“மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!” – கடந்த தேர்தலை விடக் குறைவு; அக்டோபர் 9-ல் வாக்கு எண்ணிக்கை!

October 6, 2026

“‘சென்னை: தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தனித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

839012679_1123462123527488_138327752421248103_n

பாரிஸில் பாரிய தீ விபத்தில் நாவாந்துறையைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!

October 6, 2026

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் La Courneuve பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், இலங்கைத் தமிழர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக