சென்னை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டுவந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான அரசினர் தனித்தீர்மானத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் 3 முக்கியத் தீர்மானங்கள்:
மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 543 என்பதை நிரந்தரமாக்க வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் பின்வரும் தீர்மானங்களை முன்மொழிந்தார்:
-
நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்கப்பட வேண்டும்.
-
மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கு இடையே, அதாவது விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தை தற்போது உள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.
-
வரவிருக்கும் மக்களவைப் பொதுத்தேர்தலிலும், அதன்பிறகு வரும் சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் 33 சதவீத (மூன்றில் ஒரு பங்கு) தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை எவ்விதக் காலதாமதமுமின்றி உறுதி செய்ய வேண்டும்.
பாமகவின் திடீர் எதிர்ப்பு – எம்.எல்.ஏ கணேஷ் குமார் ஆவேசம்:
இந்தத் தீர்மானத்திற்குப் பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாகச் சட்டசபையில் பேசிய பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார், “ஒன்றிய அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வருமா, வராதா என்ற சூழ்நிலையில், வெறும் செவிவழிச் செய்தியை மட்டும் வைத்துக்கொண்டு இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருவதன் அவசியம் என்ன? முதலமைச்சர் இந்தத் தீர்மானத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அதேவேளையில், மகளிர் உரிமை அதிகாரத்திற்கு எதிராகப் பாமக ஒருபோதும் நிற்காது,” என்று ஆவேசமாகக் கூறினார்.
#PMK #Delimitation #TNAssembly #ChiefMinisterVijay #ThalapathyVijay #TVKGovernment #GaneshKumar #TNPolitics #TamilNaduNews #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates