பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் முன்னெடுக்கப்படும் உலகளாவிய 16 நாள் செயற்பாட்டுப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, கொழும்பின் முக்கிய அடையாளச் சின்னங்கள் நவம்பர் 25 முதல் 27ஆம் திகதி வரை செம்மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தன.
Women In Need (WIN) அமைப்பினால், நெதர்லாந்து இராச்சியத் தூதரகம் மற்றும் கொழும்பு மாநகர சபையின் ஆதரவுடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவித்தல் மற்றும் இவ்வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துதல் ஆகியவை இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களாகும்.
இதன் தொடர்ச்சியாக, “மௌனத்திலிருந்து நீதியை நோக்கி: பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஒவ்வொருவரினதும் பங்கு” (From Silence to Justice: Everyone’s Role in Ending Violence Against Women and Girls) என்ற தலைப்பிலான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.