கிராந்துருகோட்டை பகுதியில் உள்ள 3ஆம் மைல் கல் அருகே கெப் வாகனமும் உழவு இயந்திரமும் மோதியதில் தம்பதியர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸாரின் தகவல் படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவரும், 44 வயதான பெண் ஒருவரும் ஆவர். அவர்கள் பயணம் செய்த கெப் வாகனத்தில் மொத்தம் 13 பேர் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த உழவு இயந்திரத்தின் சாரதி உள்ளிட்ட ஏழு பேரும் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.