கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற செவிலிய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு பிள்ளையின் தாயான இவர், தனது கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், தற்காலிகமாக வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட செவிலியருக்கும், வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றும் 33 வயதுடைய மனோஜ் பெத்தும் அகலங்க என்ற நபருக்கும் இடையே நீண்டகாலமாக தொடர்பு இருந்துள்ளது.

கடந்த முதலாம் திகதி பணி முடிந்து வீடு திரும்பிய செவிலியருக்கும், சந்தேக நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று இரவு 7.30 மணியளவில், முன்னாள் மனைவி வீதியில் சென்ற வந்தபோது, அவரைத் துரத்திச் சென்ற சந்தேக நபர் கத்தியால் அவரது மார்பில் குத்தியுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் வீதியில் விழுந்து கிடந்த அவரைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக அரநாயக்க வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.

கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில், அரநாயக்க பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, சந்தேக நபர் ஏற்கனவே திருமணமாகி சட்ட ரீதியாக பிரிந்தவர் என்பதும், செவிலியருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த கொலையை செய்ததும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாவனெல்லை நீதவான் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

922781602_1124352817138088_5660692993300676305_n

வடக்கு மாகாணத்தில் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் அலுவலகம் அமைக்க ஆராய்வு: பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை!

November 25, 2026

வடக்கு மாகாணப் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர்

photo-collage.png (1)

சாவகச்சேரியில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான மதிப்பளிப்பு

November 25, 2026

மாவீரர் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தலும், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் நேற்று நவம்பர் 24ஆம் திகதி

jo

ஜோன்ஸ்டனுக்கு அபராதமும் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும்

November 25, 2026

சட்டவிரோதமாக சொகுசு வாகனமொன்றைத் தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு

922781602_1124352817138088_5660692993300676305_n

வட மாகாணத்தில் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் அலுவலகம் அமைக்க ஆராய்வு?

November 25, 2026

வடக்கு மாகாணப் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர்

chemmani-gates

எலும்புக்கூடுகளைத் ‘தொற்றுநோய்’ என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்

November 25, 2026

மோகனதாரணி மயூரன்- ஈழ மண்ணின் வரலாற்றில் ஆறாத வடுக்களாகத் தொடரும் மனித உரிமை மீறல்களின் வரிசையில், செம்மணி புதைக்குழி குறித்த

dsfs

முள்ளியவளையில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோகத்தருக்கான மதிப்பளிப்பு

November 25, 2026

மாவீரர் தினத்தை முன்னிட்டு, தாயக விடுதலைக்காகத் தமது பிள்ளைகளை உகந்தழித்த மாவீரர்களின் பெற்றோர்கள் உரித்துடையோர்களைக் மதிப்பளிப்பு நிகழ்வு நேன்று 24.11.2026

WhatsApp Image 2026-11-25 at 15.36.37

கிளிநொச்சியில் மீண்டும் எழுந்தது மாவீரர் நினைவு வளைவு!

November 25, 2026

கிளிநொச்சி டிப்போ சந்தியில் பொலிஸாரால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அடாவடித்தனமாகக் கழற்றி எடுத்துச் செல்லப்பட்ட மாவீரர் நினைவு வளைவு, எமது

ipl

2027ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் ஏழு இலங்கை வீரர்கள்

November 25, 2026

2027ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) வீரர்கள் ஏலத்தில் ஏழு இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

ha

ஆடைக் கடையில் கொள்ளை

November 25, 2026

ஹட்டன் நகரில் இரவு நேரங்களில் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து இடம்பெற்று வரும் உடைப்பு மற்றும் திருட்டுச் சம்பவங்களுக்கு மத்தியில், நகர

m

நிலவைச் சுற்றி பிரம்மாண்ட சூரிய மின்தகடு வளையத்திலிருந்து அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்?

November 25, 2026

நிலவைச் சுற்றி 6,800 மைல் (சுமார் 11,000 கிலோமீற்றர்) நீளத்திற்கு அமைக்கப்படும் சூரிய மின்தகடுகளின் வளையத்தின் ஊடாக, பூமி முழுவதும்

ha

கல்லரிச்சலில் ஆட்டுப்பண்ணைக்குத் தீ: ஆடுகள் கருகிப் பலி

November 25, 2026

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 02 பகுதியில் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் ஆட்டுப்பண்ணை ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டதில் பண்ணை

sajith-2

அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்யும்போது பாரபட்சம் கூடாது!

November 25, 2026

அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்யும்போது பாரபட்சமற்றதும் வெளிப்படைத்தன்மையுடனும் கூடிய நடைமுறையை இப்போதாவது பின்பற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.