குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழினப் படுகொலையில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று (18) குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் குருமன்வெளி வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.

குருமன்வெளி வட்டார உறுப்பினர் அ.பத்மதேவு தலைமையில் நடைபெற்ற இந்நாளில், இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் “முள்ளிவாய்க்கால் நினைவு நாள் – மே 18”, “தமிழின அழிப்பு நாள்” ஆகிய வாசகங்கள் தாங்கிய பிரதான பதாகை அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின் முதல் அம்சமாக, ஈகைச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது, ஈழப் போராட்டத்தில் தனது காலை இழந்த மாற்றுத்திறனாளி போராளியான கோபாலசிங்கத்தால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

அவரைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக அங்கு கூடியிருந்தவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அதனையடுத்து, அரசியல் பிரமுகர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை) பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ், உபதவிசாளர் அ.விசிகரன், போரதீவுப்பற்று பிரதேச சபை உபதவிசாளர் த.கயசீலன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றி, மரணத்தின் விளிம்பில் உப்புக் கஞ்சியை மட்டும் அருந்தி உயிர் தப்பிய அவல நிலையை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் “முள்ளிவாய்க்கால் கஞ்சி” வழங்கும் நிகழ்வும் இங்கு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

“உயிரிழந்த உறவுகளின் தியாகங்களை நெஞ்சில் ஏந்தி, தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்ற உறுதியுடன் இந்த நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றது.
0

மல்வானை காணியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க பிரதமர் சம்மதம் ; பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்!

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்