கடந்த வாரம் காடொன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 51 வயதுடைய பெண், ஒரு கொலைக் குற்றத்திற்கு (homicide) ஆளாகியுள்ளார் என்று கியூபெக் நகர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கியூபெக் நகரின் தெற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள லேவிஸ் (Lévis, Que.) என்ற இடத்தின் காடுகளடர்ந்த பகுதியில், கடந்த ஜூன் 22 அன்று சுஷ்மிதா பாஸ்கரன் (Sushmita Bhaskaran) என்பவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விசாரணை தொடர்பாக 61 வயதுடைய ஆடவர் ஒருவர் அதே நாளில் கைது செய்யப்பட்டதாகக் கியூபெக் நகர் பொலிஸ் பேச்சாளர் வில்லியம் ரொபிடைல் (William Robitaille) தெரிவித்துள்ளார்.
பொலிஸாரால் சேகரிக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையிலேயே, லேவிஸ் பொலிஸாரின் உதவியுடன் அந்தக் காடுகளடர்ந்த பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டதாக ரொபிடைல் கூறினார்.
சந்தேகநபர் இன்றைய தினம் கியூபெக் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என்றும், கியூபெக் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் (prosecutions office) இந்த வழக்கைக் கையில் எடுத்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.