காதலியை கொன்று எரித்த காதலனுக்கு மரண தண்டனை!

கடந்த 2020ஆம் ஆண்டு மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவியாபொல பகுதியில், தனது காதலியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலைத் தீயிட்டு எரித்த காதலனுக்கு மொனராகலை மேல்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (31) அன்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

மொனராகலை மேல்நீதிமன்ற நீதிபதி கலாநிதி தமித் நலிந்த ஹேவா வசம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

கண்டி, பலகல்ல ரத்தரன்பொத்த பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரனகே டொன் அசேல பிரபாத் மிஹிரங்க வீரசிங்க (சம்பவத்தின் போது வயது 27) என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2020 ஜூன் 01ஆம் திகதி, மெதகம, திவியாபொல பகுதியைச் சேர்ந்த அஞ்சலி சதுரிக்கா சௌமியா (வயது 27) எனும் தனது காதலியின் வீட்டிற்குச் சென்ற எதிரி, அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் கொலையை மறைப்பதற்காக சடலத்தைத் தீயிட்டு எரித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்திருந்தது. நீண்ட கால விசாரணைகளின் பின்னர், பிரதிவாதிக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் எதிரி தரப்பிற்காக சிரேஷ்ட சட்டத்தரணி யூ.ஆர். டி சில்வாவுடன் சட்டத்தரணி வசந்த ரத்நாயக்க முன்னிலையாகினர். அரசு தரப்பில் அரச சட்டத்தரணி துமிந்த டி சில்வா வழக்கை மெய்படுத்தினார்.

எட்மண்டன் பச்சை குத்தும் கலைஞர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு-:பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பொலிஸார்

April 21, 2026

எட்மண்டனைச் சேர்ந்த பச்சை குத்தும் கலைஞர் (Tattoo Artist) ஒருவர் மீது ஐந்து பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில்,

XJIFMY5U7BHQXHVM7FLUATU3WY

ஹாமில்டன் அதிரடி சோதனை: போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் நாய்க்குட்டிகள் மீட்பு

April 21, 2026

ஹாமில்டனில் உள்ள மருந்து விற்பனை நிலையம் (Dispensary) ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், $210,000 மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன்,

BZXRM6W4AVFI7NUIUUS2PITNBM

வாகனத்தின் பின் இருக்கையில் மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் உயிரிழப்பு: டொராண்டோ பொலிஸ்

April 21, 2026

டொராண்டோவில் திங்கட்கிழமை அன்று வாகனத்தின் பின் இருக்கையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

arrest

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இந்தியர் கைது

April 21, 2026

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய ‘குஷ்’ (Kush) போதைப்பொருளுடன் வெளிநாட்டு நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Wootler

குண்டுத் தாக்குதல் சதி தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகளை பொலிஸார் மறுப்பு

April 21, 2026

கொழும்பு மற்றும் ஏனைய மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் திட்டமிட்டிருந்ததாக

Screenshot 2026-04-21 143137

சென்னை என்றுமே தி.மு.க.வின் கோட்டை! “தமிழ்நாடு வெல்லும்” – பிரசாரத்தின் இறுதி நாளில் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவு!

April 21, 2026

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில், திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின்

qr

கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடர்பில் புதிய அறிவிப்பு

April 21, 2026

இலங்கையில் தற்போதைய கியூ.ஆர் குறியீடு முறையின் கீழேயே எரிபொருள் விநியோகம் தொடரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.

east 20261

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள்-ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த நாளின் வலி இன்னும் ஆறவில்லை.-.உண்மை நீதியை நிலைநாட்டவேண்டும் – ஐநாவின் பிரதிநிதி

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அந்த நாளின் வடுவை நாடு இன்னும் சுமந்து

easter

உண்மை கண்டறியப்பட்ட பின்னரே மன்னிப்பு சாத்தியம்: வத்திக்கான் தூதுவர் வலியுறுத்தல்

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னாலுள்ள உண்மை நிலைநாட்டப்பட்ட பின்னரே, அத்தாக்குதல்களை நடத்தியவர்களை மன்னிப்பது குறித்துச் சிந்திக்க முடியும் என இலங்கைக்கான

675177459_1497864805036429_5112534639948039167_n

“பிரேமலதா நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார்!” – எடப்பாடியில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!

April 21, 2026

சேலம், சேலம் மாவட்டம் எடப்பாடியில் 2-வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

fa

நெற்பயிர்ச் செய்கை பாதிப்பு; விவசாயிகளுக்கு 1,200 மில்லியன் ரூபா இழப்பீடு!

April 21, 2026

மாத்தறை மாவட்டத்தில் குடிநீருடன் கடல் நீர் கலப்பதைத் தடுப்பதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் 2019ஆம் ஆண்டு

japp

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும்?

April 21, 2026

ஜப்பானில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத்