கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காணாமல் போன பிரபல நடிகர் படுகொலை!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்திலுள்ள ‘லயன்ஸ் பே’ (Lions Bay) பகுதியில் வசித்து வந்த நிலையில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த பிரபல நடிகர் ஒருவர், படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் கருதி அந்நாட்டுப் பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

45 வயதான ஸ்டீவர்ட் மெக்லீன் (Stewart McLean) எனும் இந்நடிகர், கடந்த மே 15 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கடந்த மே 18 அன்று ஸ்குவாமிஷ் (Squamish) பிராந்திய அரச மாகாண காவல்துறைக்கு (RCMP) உத்தியோகபூர்வமாகத் தகவல் வழங்கப்பட்டிருந்தது.

வான்கூவர் (Vancouver) நகருக்கு வடமேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள லயன்ஸ் பே பகுதியில் உள்ள அவரது இல்லத்திலேயே மெக்லீன் இறுதியாகக் காணப்பட்டதாகப் பொலிஸ் அதிகாரி வெனெசா முன் (Vanessa Munn) தெரிவித்துள்ளார்.

ஸ்டீவர்ட் மெக்லீன், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘பேர்ஜின் ரிவர்’ (Virgin River) மற்றும் ‘மர்டர் இன் எ ஸ்மால் டவுன்’ (Murder in a Small Town) உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் புகழ்பெற்ற ஒருவராவார்.

முன்னதாக, மே 19 ஆம் திகதி மெக்லீனின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து அச்சம் வெளியிட்ட பொலிஸார், அவரைக் கண்டுபிடிப்பதற்காகப் பொதுமக்களின் உதவியைக் கோரியிருந்தனர். அதனைத் தொடர்ந்து, மே 20 ஆம் திகதி காலை லயன்ஸ் பே தேடல் மற்றும் மீட்புக்குழுவினர் (Search and Rescue) அப்பகுதியில் பாரிய தேடுதல் வேட்டையொன்றை ஆரம்பித்த போதிலும், அன்றைய தினமே அக் குழுவினர் தற்காலிகமாகத் தங்களது தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டனர்.

“இவ்விடயம் குறித்து ஸ்குவாமிஷ் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட புலனாய்வு விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட சில முக்கிய சான்றுகளின் அடிப்படையில், மெக்லீன் ஒரு திட்டமிட்ட படுகொலையின் (Homicide) மூலமே உயிரிழந்துள்ளார் என நம்புவதற்கு வலுவான காரணங்கள் கிடைத்துள்ளன” எனப் பொலிஸ் அதிகாரி வெனெசா முன் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, இத் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட அதே தினத்தில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் ‘ஒருங்கிணைந்த படுகொலை புலனாய்வுக் குழு’ (IHIT) இந்த வழக்கின் விசாரணைகளைத் தன்வசம் எடுத்துக்கொண்டுள்ளது.

மெக்லீனின் உடல் எங்கு கண்டெடுக்கப்பட்டது அல்லது மீட்கப்பட்டதா என்பது குறித்த மேலதிக விபரங்கள் எதனையும் காவல்துறை இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை. எவ்வாறாயினும், பிரன்சுவிக் கடற்கரை (Brunswick Beach) பகுதியில் அமைந்துள்ள மெக்லீனின் வீட்டிற்கு அருகிலுள்ள இரயில் தண்டவாளங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதி ஆகியவற்றில் படுகொலை புலனாய்வுப் பிரிவினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தீவிர சோதனைகளில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக இருந்தது.

அதிர்ச்சியில் மூழ்கிய அண்டை வீட்டாரும் சமூகமும்:

மெக்லீனின் நீண்டகால அண்டை வீட்டாரான ரஸ் மேக்லிஜான் (Russ Meiklejohn) மற்றும் அவரது மனைவி டொரதி ஆகியோர் இச் செய்தி குறித்து மிகுந்த அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர். மெக்லீன் மிகவும் அன்பானவர் என்றும், இந்த சிறிய சமூகத்தில் அவர் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்ந்தார் என்றும், அவருக்கு யாராவது தீங்கு விளைவிக்க நினைப்பார்கள் என்பதைத் தங்களால் கற்பனை கூட செய்ய முடியவில்லை என்றும் அவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் பெருமளவிலான ஆயுதம் ஏந்திய பொலிஸார் குவிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுவதைக் கண்டு அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியிலும் பீதியிலும் ஆழ்ந்துள்ளனர். இக் கொலைச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்திருப்பின், உடனடியாகப் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு படுகொலை புலனாய்வுக் குழுவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

vick

பிரான்ஸில் சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: 400 பேர் கைது

May 31, 2026

சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர்

Breast can

இலங்கையில் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் அதிநவீன இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

May 31, 2026

நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும்

arre

மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே தூக்கி அதிரடி காட்டிய ’பைக் ரேஸர்கள்’ கைது!

May 31, 2026

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில், கதான மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே

pala

பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

May 31, 2026

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர். பலாலி வீதியில்

ble

‘நீல நிலா’ இன்றிரவு வானில் தோன்றும் அதிசயம்

May 31, 2026

இன்று (31) வானில் அரிய விண்வெளி நிகழ்வான ‘நீல நிலா’ (புளூ மூன்) தோன்ற உள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில்

canada road11

மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பெண் பலி

May 31, 2026

சனிக்கிழமை இரவு மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் (Highway 401) ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர்

canada police2555

‘நெஞ்சை உலுக்கும் சம்பவம்’: டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சாலையைக் கடந்த பாதசாரி விபத்தில் பலி

May 31, 2026

டொராண்டோவின் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட்டில் (Eglinton Ave. West) வாகனம் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்தது குறித்து டொராண்டோ காவல்துறை

accused

மரண வழக்கின் விசாரணைக்காக காத்திருந்த நபர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக (Stunt Driving) மீண்டும் வழக்குப்பதிவு

May 31, 2026

2024 ஆம் ஆண்டு நடந்த விபத்து மரண வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காத்திருக்கும் உட்ஸ்டாக் (Woodstock) நகரைச்

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண