கல்வி மற்றும் சமூக மாற்றத்திற்கான ஒரு வழிகாட்டி ‘அபியோகய’ – பிரதமர்

நவீன உலகின் சவால்கள், மீளெழும் திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கு “அபியோகய” (சவால்) எனும் இந்த நூல் ஒரு காத்திரமான, காலத்திற்குப் பொருத்தமான பங்களிப்பாகும். அத்தோடு, கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கான பெறுமதிமிக்க நுண்ணறிவையும் இந்நூல் கற்றுக்கொடுக்கின்றது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர் பேராசிரியர் சுரங்க நாணயக்காரவினால் எழுதப்பட்ட “அபியோகய – உங்கள் வெற்றிக் கதையை நீங்களே எழுதுங்கள்” எனும் நூலின் வெளியீட்டு விழா, 2026 மார்ச் 28 பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் தாமரை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பேராசிரியர் சுரங்க நாணயக்காரவினால் எழுதப்பட்ட இந்நூல், சமகால உலக மற்றும் தனிப்பட்ட சவால்கள், புத்தாக்கம் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மனவுறுதியின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது. கல்விசார் அனுபவம் மற்றும் சர்வதேச ரீதியிலான வெளிப்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தூண்டுதல் மிக்க பார்வையை இது வாசகர்களுக்குப் பெற்றுக்கொடுக்கின்றது. இந்த நூல் மற்றும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியன இதன்போது பிரதமரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

இந்த முக்கியமான வெளியீட்டிற்காக ஆசிரியருக்குப் பாராட்டுத் தெரிவித்த பிரதமர், இத்தகைய கல்விசார் படைப்புகள் எதிர்காலச் சந்ததியினரை, குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களை ஆக்கபூர்வமாகச் சிந்திக்கவும், சவால்களை ஏற்றுக்கொள்ளவும், சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கத் தூண்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன எனக் குறிப்பிட்டார். அத்துடன், இலங்கையில் ஒரு முற்போக்கான, அதேநேரத்தில் அனைவரையும் உள்வாங்கிய கல்விச் சூழலை உருவாக்குவதில் அறிவுப் பகிர்வு மற்றும் புத்தாக்கத்தின் முக்கியத்துவத்தையும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

இந்நூலில் உள்வாங்கப்பட்டிருக்கின்ற அறிவை அதிகளவான வாசகர்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்நூலின் 5,000 பிரதிகளை மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாகப் பெற்றுக்கொடுக்கும் திட்டத்தையும் பிரதமர் இதன்போது ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் திரு. எரங்க வீரரத்ன, கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக கலுவெவ, பேராசிரியர் சுரங்க நாணயக்காரவின் குடும்ப உறுப்பினர்கள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

qr

நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை

April 17, 2026

நாளை (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

jail

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

April 17, 2026

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு

tv

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

April 17, 2026

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன

wat

நான்கு நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கிப் பலி!

April 17, 2026

கடந்த ஏப்ரல் 12 முதல் நேற்று (16) வரையிலான நான்கு நாட்களில் மட்டும், நீரில் மூழ்கி 20 பேர் துரதிர்ஷ்டவசமாக

jey

நிலக்கரி கொள்வனவு ஊழல் அழுத்தங்கள்; எரிசக்தி அமைச்சர் இராஜினாமா!

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தனது பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ

sr air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதான அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின்

chac

லங்கா நிலக்கரி நிறுவனத்தின் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதியால் விசேட ஆணைக்குழு

April 17, 2026

அரசுக்குச் சொந்தமான லங்கா நிலக்கரி நிறுவனம் (Pvt) Ltd அல்லது அதன் பின்வந்த நிறுவனங்களில், நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார

up

15 வயது மாணவி சடலமாக மீட்பு

April 17, 2026

செ.தி. பெருமாள் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் குதித்து, 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இன்று மதியம்

im

சீர்திருத்த வேகத்தைத் தக்கவைக்க இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தல்

April 17, 2026

உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் தளம்பல் நிலைகளால் இலங்கை மீண்டும் அபாயங்களை எதிர்கொண்டுள்ளதால், தனது சீர்திருத்த வேலைத்திட்டங்களில் உறுதியாக இருக்குமாறு

ssdfes

அம்பேத்கரின் சிந்தனைகளை யாராலும் தகர்க்க முடியாது – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

April 17, 2026

சாதி ஒழிப்புக்கு கல்வியை தவிர வேறு ஆயுதம் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். மதுரை

kush

நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது – குஷ்பு

April 17, 2026

“இந்​தத் தேர்​தலில் திமுக-வுக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம் காத்​திருக்​கிறது. இது முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் திமுக-​வில் உள்ள அனை​வ​ருக்​கும் நன்​றாக தெரி​யும்”

ann

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது – அண்ணாமலை

April 17, 2026

“தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை நினைவில் வைத்துக்கொண்டு வாக்களியுங்கள்,”