“கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா?” – அதிமுகவிலிருந்து மூத்த தலைவர் செம்மலை அதிரடி விலகல்!

சென்னை:

“உட்கட்சிச் சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது; கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா!” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடுமையான வார்த்தைகளுடன் விலகல் கடிதம் அனுப்பிவிட்டு, கட்சியின் மூத்த தலைவர் செம்மலை அதிமுகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக-வின் மிக முக்கியமான மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலை, அக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராகவும், சட்டசபை துணைச் சபாநாயகராகவும், கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றியவர். தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து அதிமுகவில் எற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு இடையே, அவர் இன்று தனது பதவிகளையும், கட்சி உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்துள்ளார்.

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ள உருக்கமான கடிதத்தில், “தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மன வேதனையை உண்டாக்கிவிட்டன. இதே மனநிலையில் தான் லட்சக்கணக்கான தொண்டர்களும் இருக்கிறார்கள். நடக்கும் சம்பவங்கள் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை; மாறாகக் கவலை அளிப்பதாகவே உள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய, புரட்சித்தலைவி அம்மா காப்பாற்றிய இயக்கத்திற்கு இந்த கதியா? ‘கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா! நோகுதய்யா; மனசு நோகுதய்யா’ என்ற உள்மனதின் வெளிப்பாடு எல்லோருக்குமானது ஆகும். உட்கட்சிச் சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது என்று பிரபல ஆங்கில நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவிற்கு நிலைமை போய்விட்டது” என்று சாடியுள்ளார்.

மேலும், “அம்மா மறைவுக்குப் பிறகு எனக்குப் பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன, தடுக்கப்பட்டன. அதைப்பற்றிக் கூட நான் கவலைப்படாமல் தலைமைக்குக் கட்டுப்பட்டுப் பணியாற்றினேன். ஆனால், இப்போது உருவாகியுள்ள சூழ்நிலைகளைப் பார்க்கிற போது இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க என் மனம் இடம் தரவில்லை. எனக்கு அரசியல் அங்கீகாரம் தந்த இருபெரும் தலைவர்களின் ஆன்மாக்களிடம் மன்னிப்புக் கோரி, கணத்த இதயத்தோடு கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். எஸ்பி வேலுமணி தரப்பின் பொதுக்குழு வியூகம், இபிஎஸ்ஸின் அவசர உத்தரவு என அதிமுக தத்தளித்து வரும் வேளையில், செம்மலையின் இந்த விலகல் எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த மற்றுமொரு பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது.

#SemmalaiResigns #ADMK_Crisis #EdappadiPalaniswami #BreakingNews #May18 #TamilNaduPolitics #ADMK_Split #IntraPartyFeud #MGR_Legacy #JayalalithaaFollowers #PoliticalSensationTN #SemmalaiLetter #EPSvsVelumani #VijayAsCM #TVK_Government #ThalapathyVijay #SaveADMK #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_“`

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்