கமராவுக்குள் போதைப்பொருள் கடத்தியவர் கைது!

சிசிடிவி கமராவில் மறைத்து போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆந் திகதி வரை தடுப்புக்காவல் உத்தரவினை அக்கரைப்பற்று நீதிமன்று வழங்கியுள்ளது.

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்குத் தனியார் பேருந்து மூலம் கடத்தி வரப்பட்ட 34 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 20 வயதுடைய சந்தேக நபர் வியாழக்கிழமை (26) அதிகாலை அக்கரைப்பற்றில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (26) ஆஜர்படுத்திய போது எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆந் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர் சிசிரிவி கமரா பொதிக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த நிலையில் அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைதானார்.

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் இனந்தெரியாத நபரொருவரால் பொதியொன்று கையளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பொதியில் தொலைபேசி இலக்கமொன்று குறிப்பிடப்பட்டிருந்ததுடன்இ அக்கரைப்பற்றில் உள்ள நபரொருவர் இதனைப் பெற்றுக்கொள்வார் எனப் பேருந்து நடத்துனரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடத்தல் குறித்துக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் பகீரதன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த இடத்திற்கு பொதியை பெற்றுக்கொள்ள வருகை தந்த சந்தேக நபர் கைதானார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்ட சிசிரிவி கமராவினை சோதனையிட்டபோது அதன் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த 34 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். போதனா மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த நபரின் இரு சிறுநீரகங்களும் தானம்
இருவருக்கு வாழ்வளித்த சிங்களவர்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மூளைச்சாவடைந்த சிங்களவர் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களும் தானமாக வழங்கப்பட்ட நிலையில், அவர் மூலம் இருவருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-
போகஸ்வெள பகுதியைச் சேர்ந்த ஆர். முத்துபண்டா என்பவர் மூளைக்கட்டி காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை மூளைச் சாவடைந்துள்ளார். அவரது குடும்பத்தினர் அவரது இரு சிறுநீரகங்களையும் தானமாக வழங்க ஒப்புக்கொண்டனர்.

இதற்கமைய, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் இரு சிறுநீரகங்களும் பிரித்தெடுக்கப்பட்டு, காத்திருப்புப் பட்டியலில் இருந்த ஒருவருக்கு ஒரு சிறுநீரகம் உடனடியாக வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் நாட்டிலுள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிறுநீரகம் அவசியம் தேவைப்படும் நபருக்குப் பொருத்தப்பட்டுள்ளது.

Shakthivel

இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை செம்மணி புதைகுழி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது – அருட்தந்தை மா. சத்திவேல்

June 14, 2026

செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகளில் வெளிவரும் மனித எச்சங்களும், குழந்தைகளின் பாவனை பொருட்களும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும்

appu

குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

June 14, 2026

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படும் வரை ஐக்கிய

arju

நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் நாங்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் அர்ச்சுனா இராமநாதன்

June 14, 2026

நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளார். ஆகவே அவர் ஏனைய இனங்களையும் ஆதரிப்பார். 2029 ஆம் ஆண்டு

photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்