கனேடிய தமிழ்சமூகத்தின் மீதான சிங்களப் பௌத்த பேரினவாதத்தின் அச்சுறுத்தல் – உலகத் தமிழர் உரிமைக்குரல் அமைப்பு

கனடா அரசாங்கமும் அதன் நட்பு நாடுகளும் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை விதிக்காமல் இலங்கைக்கு நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

இந்த அணுகுமுறை, தொடர்ச்சியான இனப்படுகொலைக்கு வழிவகுக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதுடன், ஈழத் தமிழ் மக்களின் அடையாளம் மற்றும் உரிமைகளை ஒடுக்குவதற்கான நாடுகடந்த முயற்சிகளைத் தூண்டும் சூழல்களையும் உருவாக்குகிறது என குறிப்பிடும் “உலகத் தமிழர் உரிமைக்குரல்” அமைப்பு;
இந்த அவசரமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து அளவிலான அரசு அதிகாரக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் உறுதியான மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறது.

இது தொடர்பாக “உலகத் தமிழர் உரிமைக்குரல்” அமைப்பின் Advocacy Coordinator & Media Relations பிரதிநிதி குமிதினி குணரத்தினம் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“உலகத் தமிழர் உரிமைக்குரல்” அமைப்பின் சார்பாக அவர் வெளியிட்டிள்ள ஆங்கில மொழியிலான ஊடக ( From The Vandalism of the Tamil Genocide Monument to Acts of Intimidation: A Pattern of Systematic Targeting of Eelam Tamils in Canada)அறிக்கையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு அமைந்துள்ளது;

தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதப்படுத்தப்பட்டதிலிருந்து அச்சுறுத்தல் நடவடிக்கைகள் வரை: கனடாவில் ஈழத் தமிழர்களைத் திட்டமிட்டு குறிவைக்கும் ஒரு சதிமுறைமை!

பல தசாப்தங்களாக, ஈழத் தமிழர்களின் அடையாளம், தமிழ் இனப்படுகொலையில் பலியானவர்களின் நினைவேற்றம், மற்றும் அவர்களின் கூட்டு அடையாளத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆகியவை இலங்கை அரசு மற்றும் அதன் துணை அமைப்புகளால் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டு வருகின்றன.

இது தீவுக்குள் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழ் புலம்பெயர் சமூகத்திலும் நடைபெற்று வருகிறது.

ஆறாவது திருத்தச் சட்டம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மூலம், பேச்சு சுதந்திரம், சுயநிர்ணய உரிமை, அமைதியான கூட்டம் ஆகிய அடிப்படை உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சட்டக் கட்டமைப்புகள் நீண்டகால அடக்குமுறையின் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு இணையாக, தமிழீழத்தில் சிங்களமயமாக்கல் மற்றும் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் அரசு ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவை பெரும்பாலும் தொல்லியல் அல்லது அபிவிருத்தி திட்டங்கள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை அளவிலான குடியேற்றங்கள் மற்றும் கலாச்சார மாற்றங்கள் மூலம் நிகழ்த்தப்படுகின்றன.

இந்த நீண்டகால இனப்படுகொலை பின்னணியில்,

“உலகத் தமிழர் உரிமைக்குரல்” அமைப்பு, ஒன்ராறியோவின் பிராம்டன் நகரில் உள்ள “தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம்” மீதான சமீபத்திய இனவெறி தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த அழிவுச் செயல் வெறும் சொத்துச் சேதம் மட்டுமல்ல;

1940களிலிருந்து இலங்கை அரசால் தமிழீழத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இனப்படுகொலையில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து துக்கம் அனுஷ்டித்து வரும் உலகெங்கிலுமுள்ள ஈழத் தமிழர்களுக்கு நேரடியான விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுடன் கூடிய ஓர் அவமானமாகும்.

இந்த அழிவுச் செயல்,

“சிங்கள தீப ஜாதிக பெரமுன” என்ற சிங்கள தேசியவாத அரசியல் கட்சி வெளியிட்ட அறிக்கைக்குப் பின்னர் நடைபெற்றுள்ளது.

அந்த அறிக்கையில் பிராம்டன் மேயர் பற்ரிக் பிரவுனிடம் (Patrick Brown),

நினைவுச்சின்னத்தை அகற்றுமாறு கோரப்பட்டிருந்தது.

நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டது முதல் இலங்கை அரசு அதை அகற்றுவதில் தொடர்ச்சியான ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த நிகழ்வுகள் முன்னர் நடைபெற்ற சம்பவங்களுடன் இணைந்து, ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட விரோத முறையை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக,

2025 ஜனவரி 27 அன்று, ஒன்ராறியோவைச் சேர்ந்த ஒரு நபர் (தடைசெய்யப்பட்ட போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்சவுடன் தொடர்புடையவர்) கனடாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் காவல்துறைக்கு கடிதங்கள் அனுப்பி, தமிழ் சமூகத்தினரையும் செயற்பாட்டாளர்களையும் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காக குற்றவாளிகளாக்குமாறு கோரினார்.

அந்தக் கடிதங்கள் தமிழ் இனப்படுகொலையை மறுத்ததுடன், இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்தன.

அதேபோல்,

2025 நவம்பர் 21 அன்று, பிராம்டன் நகரில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து,

// எங்கள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட மிரட்டல் மற்றும் தொல்லை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன பின்னர்,

இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், (Vijitha Herath) இலங்கைகான கனடாவின் உயர்ஸ்தானிகர் இசபெல் கேத்தரின் மார்ட்டினைச் (Isabelle Catherine Martin) சந்தித்து, தமிழ் சுயநிர்ணய உரிமை தொடர்பான தமிழ் அரசியல் வெளிப்பாடு மற்றும் செயல்பாடுகளை ஒடுக்குமாறு ஒட்டாவாவை வலியுறுத்தினார்.

இந்தச் சம்பவங்கள் தனிப்பட்டவை அல்ல. அவை ஈழத் தமிழர்கள் மீது தொடர்ச்சியாகவும் ஒருங்கிணைக்கப்பட்டும் மேற்கொள்ளப்படும் விரோத நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

இந்தச் சம்பவங்கள் தனிப்பட்டவை அல்ல. மாறாக, அவை ஈழத்தமிழர்களுக்கு எதிராக இயக்கப்படும் தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட விரோதப் போக்கின் ஒரு பகுதியாகும்; இதன் நோக்கம், மக்களின் உரிமைகளை ஒடுக்குவதும், அடிப்படை உரிமைகளை அடக்குவதும், அடையாளப் பாதுகாப்பைச் சிதைப்பதுமாகும்.

மிக சமீபத்தில், 2026 மார்ச் 7 அன்று டொரொன்டோவில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினப் பேரணியின்போது, தங்களை சமூக அதிகாரியாக அறிமுகப்படுத்திய ஒரு போலீஸ் அதிகாரி,
தமிழ் பங்கேற்பாளர்களிடம் தமிழீழ தேசியக் கொடியை (அவர்களின் கூட்டு வரலாற்று அடையாளத்தின் வெளிப்பாடு) காட்டினால் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என்று எச்சரித்தார்.

இத்தகைய அச்சுறுத்தல்கள் கனடாவில் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரங்களைப் பாதுகாப்பதில் உள்ள திறன்போக்குக்களின் மறைமுக அச்சுறுத்தல்கள் கடுமையான கவலைகளை எழுப்புகின்றன.

இந்த நடவடிக்கைகள் கனடாவில் வாழும் ஈழத் தமிழர்களின் கண்ணியம், உரிமைகள் மற்றும் அடையாளத்தின் மீது தொடுக்கப்படும் அச்சுறுத்தலுடன் கூடிய கடுமையான உரிமை மீறல்களாகும்.

கனடிய சமூகத்தின் உறுப்பினர்களாக, ஈழத் தமிழர்களுக்கு தங்கள் கலாச்சார மற்றும் அரசியல் வெளிப்பாட்டுக்கு முழு பாதுகாப்பு உரிமை உண்டு – மிரட்டல், கண்காணிப்பு அல்லது பழிவாங்கல் இன்றி வாழும் உரிமைபெற்றவர்கள். இத்தகைய சூழமைவிலும், கனடா அரசும் அதன் நட்பு நாடுகளும் இலங்கைக்கு நிதி உதவி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால் இதில் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

இந்த அணுகுமுறை தொடரும் இனப்படுகொலையை ஊக்குவிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

மற்றும் ஈழத் தமிழர்களின் அடையாளத்தையும் வக்காலத்தையும் ஒடுக்கும் சர்வதேச முயற்சிகளுக்கு வலு சேர்க்கிறது.

இந்த அபயகரமான, அவசரமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,

“உலகத் தமிழர் உரிமைக்குரல்” அமைப்பு, அனைத்து அளவிலான அரசு சார்ந்த பொறுப்புக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் உறுதியான மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறது.

கனடாவில் வாழும் ஈழத் தமிழர்கள் மீதான தொடர்ச்சியான பாகுபாட்டைத் தீர்ப்பதற்கும் தடுப்பதற்கும், அவர்களின் அடையாளத்தை முறையாக அங்கீகரிப்பது,

தமிழீழம் என்ற அவர்களின் வரலாற்று தாயகத்தை அங்கீகரிப்பது, மற்றும், தமிழ் இனப்படுகொலையை சட்டபூர்வமாக அங்கீகரிப்பது அவசியமாகும் .

கனடா அரசு அரசியல் ரீதியாக தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்திருந்தாலும், இதுவரை சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கவில்லை. இத்தகைய அங்கீகாரம் உண்மையான சட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கியிருக்க வேண்டும்.

அதில் சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) போன்ற சர்வதேச வழிமுறைகள் மூலம் பொறுப்புக்கூறலைத் தேடுவதும் அடங்கும். இதில், 2024 நவம்பர் 20 அன்று எம்.பி. ஷான் சென் (Shaun Chen) (ஸ்கார்பரோ நார்த்) (Scarborough North) அவர்களால் பொதுமக்கள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட e-5058 மனு (Petition No. 441-02871) குறிப்பிடத்தக்கது.

இத்தகைய நடவடிக்கைகள் இல்லாவிட்டால், கனடாவில் உள்ள ஈழத் தமிழர்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தல், மிரட்டல் மற்றும் அமைப்பு ரீதியான ஒதுக்குதலுக்கு ஆளாகிக் கொண்டே இருப்பார்கள் என குமிதினி குணரத்தினம் தனது அறிக்கை மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.

 

canada world cup

இஸ்மாயில் கோனேயின் கொடூரமான காயத்திற்குப் பின் சோகத்தில் மூழ்கிய கனடா அணி: ‘அவருக்காக இந்தத் தொடரை வெற்றிகரமாக முடிப்போம்’

June 19, 2026

கால்பந்தாட்டத்தில் நடுகளக் கூட்டணியில் (Midfield tandem) உள்ள வீரர்கள் ஒருவரையொருவர் மிகச் சரியாகப் புரிந்துகொண்டு விளையாடுவது அவசியமாகும். அதற்கமைய, இஸ்மாயில்

carney33333333333

கத்தாருக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க 6-0 வெற்றிக்குப் பின், வீரர்களின் அறையில் கனடா பிரதமர் கார்னி ஆற்றிய உரை

June 19, 2026

026 ஜூன் 19 கத்தாருக்கு எதிராக வியாழக்கிழமை பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 6-0 என்ற கோல் கணக்கிலான வெற்றிக்குப் பிறகு,

JMDVZSNVIBCJHLCBSR264K4TN4

டொராண்டோவில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபரின் மரணம் சந்தேகத்திற்கிடமானது என காவல்துறை அறிவிப்பு

June 19, 2026

டொராண்டோ நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள சந்து (Laneway) ஒன்றிற்குள் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆடவர் ஒருவரின் மரணம் சந்தேகத்திற்கிடமான

727288134_1590612522484861_5840860557900271912_n

மிசிசாகா நகரில் வயதான பெற்றோர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு: மகனைத் தேடும் காவல்துறை

June 19, 2026

வியாழக்கிழமை மாலை மிசிசாகா (Mississauga) நகரில் உள்ள வீடொன்றிற்குள் வயதான பெற்றோர் இருவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்து கண்டெடுக்கப்பட்டதை அடுத்து,

726405909_1750482232973646_2220582764764604601_n

நீதி அமைச்சர் வருகை: செம்மணி புதைகுழி முன் “OMP அலுவலகம் வேண்டாம்” என உறவுகள் அதிரடிப் போராட்டம்!

June 19, 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட வருகை தந்த நீதி அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான

726717948_1315682237340097_3613316531790611472_n

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

June 19, 2026

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தடை விதித்து கட்டளையிட்டுள்ளது

court-judge-hammer-gavel-696x398

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் கிருஷாந்திக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்த டாக்டர் அர்ச்சுனா! வீடியோக்களை உடனே தூக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

June 19, 2026

ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று கடுமையான சாட்டையடி

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

acci main

கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் வீதி விபத்துகளால் 1,297 பேர் பலி

June 19, 2026

2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்

d

36வது தியாகிகள் தின நினைவேந்தல்!

June 19, 2026

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 36வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை

chemmani

செம்மணி புதைகுழியில் 387 என்புக்கூடுகள் நேற்று வரை அடையாளம்

June 19, 2026

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று 18ஆம் திகதி வியாழக்கிழமை ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து