சென்னை
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரக்கூடாது என்ற கொடூரமான சதித்திட்டத்தோடுதான் கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்டத் திட்டமிட்டுள்ளது எனப் பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்!
காவிரி விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடக அரசு உரிய காலத்தில் ஒருபோதும் காவிரி நீரைத் திறந்து விட்டதே இல்லை. தண்ணீர் வராததால் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடகா திறந்து விட்டுள்ளது அவர்களுக்குத் தேவையற்ற வெறும் உபரி நீரை மட்டும்தான்! தமிழ்நாட்டிலிருந்து வெறும் 4 கிலோமீட்டர் தொலைவில்தான் இந்த மேகதாது அணையைக் கட்டத் திட்டமிட்டுள்ளனர். இதனால் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். இந்த விவகாரத்தில் நடுவில் எந்த முயற்சியும் தேவையில்லை; அணை கட்டக் கூடாது, அவ்வளவுதான்!” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும், மேகதாது அணை விவகாரத்தைத் தடுத்து நிறுத்தத் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும், கர்நாடக அரசுக்கு எதிராகச் சட்ட ரீதியான கடுமையான முன்னெடுப்புகளைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சௌமியா அன்புமணி அதிரடியாக வலியுறுத்தியுள்ளார்.
#SowmiyaAnbumani #PMK #CauveryIssue #MekedatuDam #KarnatakaGovt #TamilNaduPolitics #TNPolitics #Chennai #FarmersIssue #TamilNews #ViralNews #LatestNewsTN #TrendingTN #SaveCauvery #PoliticalUpdatesTN