சென்னை:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஐ.சி.யூ-வில் இருப்பதாகவும், ஆட்சி நிர்வாகம் கோமாவில் இருப்பதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
எக்ஸ் தளப் பதிவு:
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ஆவேசமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “சட்டம் ஒழுங்கு ஐ.சி.யூ-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்:
தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், “மாநிலத்தில் ஒரே நாளில் 17 கொலைகள் அரங்கேறியுள்ளன. சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தவெக எம்.எல்.ஏ மீதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது,” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சோப்ளாங்கி ஆட்சி:
தொடர்ந்து அவர், “இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில், குற்றவாளிகளுக்குப் பயமில்லை. காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை. தவெகவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை,” என்று சரமாரியாகச் சாடியுள்ளார். மேலும், “மொத்தத்தில், பார்ட்-டைம் முதலமைச்சராகவும், ஃபுல்-டைம் கன்டென்ட் கிரியேட்டராகவும் இருக்கும் விஜய் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை,” என்று மு.க.ஸ்டாலின் தனது பதிவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
#MKStalin #DMK #CMVijay #LawAndOrder #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive