சென்னை:
எஸ்.ஐ.ஆர் இல்லை என்றால் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுப் போட்டி தொடக்கம்:
சென்னை மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளை தீபசுடர் ஏற்றி அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.
எஸ்.ஐ.ஆர் குற்றச்சாட்டு:
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், \”தேர்தலுக்குச் சில காலங்கள் இருக்கும்போதே வெளிப்படைத்தன்மை இல்லாமல் எஸ்.ஐ.ஆர் முடிக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர் இல்லை என்றால் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். தேர்தல் ஆணையம் உரிய பதிலளிக்க வேண்டும்,\” என்றார்.
இருமொழிக் கொள்கை:
இருமொழிக் கொள்கையை அரசு பாதுகாத்து வருகிறது. கடந்த 2025-ஆம் ஆண்டு கரூர் மருத்துவக் கல்லூரி கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக நிறுத்தப்பட்டது எனத் தெரிவித்தார்.
செவிலியர்கள் போராட்டம்:
செவிலியர்கள் கோரிக்கை மனு அளித்தவுடன் போராட்டம் நடத்தியதாகவும், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் உடனிருந்ததால்தான் பேச்சுவார்த்தை தாமதமானது என்றும் அவர் விளக்கமளித்தார்.
டெங்கு மற்றும் தனுஷ் கட்சி:
டெங்கு காய்ச்சல் தமிழ்நாட்டில் படிப்படியாகக் குறைந்து கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் கட்சி தொடங்க உரிமை உண்டு என்றும், விஜய் மக்களின் உரிமை பேசியதால் மக்கள் தேர்ந்தெடுத்தனர் என்றும் அவர் கூறினார்.
#MinisterArunraj #SIRAction #TVK #DengueControl #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive