எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி, உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை எக்காரணம் கொண்டும் உயர்த்த வேண்டாம் என அகில இலங்கை ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (22) கொழும்பில் இடம்பெற்ற அவசர செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எரிபொருள் விலை உயர்வு என்பது தற்போது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள ஒரு நெருக்கடியாகும். இதற்காக நுகர்வோரைத் தண்டிப்பது முறையல்ல. எமது உணவகங்களுக்கு வருகை தரும் கர்ப்பிணித் தாய்மார், முதியவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் நாளாந்த கூலித் தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொள்வது அவசியம். அவர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கக் கூடாது. ஏற்கனவே எரிவாயு விலை உயர்வு காரணமாக உணவுப் பண்டங்களின் விலைகளை அதிகரித்திருந்தோம். எனவே, மீண்டும் ஒரு சுமையை மக்கள் மீது ஏற்ற வேண்டாம் என அனைத்து உணவக உரிமையாளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

அதேவேளை, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி, தேங்காய் எண்ணெய், முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகள் எவ்வித நியாயமுமின்றி கறுப்புச் சந்தையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவாவிட்டாலும், சில மாஃபியா கும்பல்கள் விலைகளைத் தீர்மானிக்கின்றன. நுகர்வோர் விவகார அதிகார சபை தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டது. எனவே, இந்த விலை மோசடியைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை முப்படையினரின் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

தற்போதைய இக்கட்டான சூழலில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் அரசியல் வேறுபாடுகளைத் துறந்து ஒன்றிணைய வேண்டும். மக்களைப் பட்டினியில் இருந்து காப்பாற்றவும், சிறு வணிகர்களைப் பாதுகாக்கவும் ஒரே மேடையில் நின்று தீர்மானங்களை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்றார்.

Omalbe

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை – ஓமல்பே சோபித தேரர்

May 14, 2026

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க

IJPMI3VQG5GVPFMLGZGLSHBJXA

ரெட் டீர் பகுதியில் 14 வயது சிறுமி மீது கொடூரத் தாக்குதல்: இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

May 14, 2026

கனடாவின் ரெட் டீர் (Red Deer) பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக

weather

காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் படிப்படியாக குறையும்

May 14, 2026

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு

QGKL6DBIBZEHBI2AL2ENAGP3SI

அல்பர்ட்டா பிரிவினை மனுவை இரத்து செய்த நீதிமன்றம்: முதற் தேச மக்களின் (First Nations) வெற்றி

May 14, 2026

அல்பர்ட்டா மாகாணத்தைப் பிரிப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய மனுவை (Separatist petition) செல்லாது என அறிவித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. முதற்

mark

கனடாவின் புதிய தேசிய மின்சார மூலோபாயம்: பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவிக்கவுள்ளார்

May 14, 2026

கனடிய அரசாங்கத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுத்தமான மின்சார மூலோபாயத்தை (Clean electricity strategy) பிரதமர் மார்க் கார்னி இன்று (வியாழக்கிழமை)

6ORIASPXUVDQTPFKTFQZZ5VA7U

ஸ்கார்பரோவில் சோகம்: இரண்டு வயதுக் குழந்தையைக் கொன்றதாகத் தாய் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது

May 14, 2026

னடாவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில், தனது இரண்டு வயது பூர்த்தியாவதற்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில், ஒரு பெண்

65ZVLLNBG5GHNHIV3BZUWPIZBM

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு

May 14, 2026

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional

Mythri

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீதும் நிதி மோசடி வழக்கு; அபராதம் தொடர்பில் அறிக்கை கோரல்

May 14, 2026

கந்தளாய் சீனி கைத்தொழிற்சாலை நிதி மோசடி வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றிய குசுமதாச மஹாநாமவுக்கு

canada courts

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களைப் பகிர்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

May 14, 2026

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை (Child sexual abuse and exploitation material) கைவசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றைப் பரிமாற்றம்

kan

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை

May 14, 2026

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த

amma_Mu

மூதூர் அம்மன்நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு – அம்மன்நகர் பகுதியில் புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வை

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்