எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இப்பாகமுவ பகுதியில் நேற்று (11) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்குப் போர் தொடங்குவதற்கு முன்னர் உலக சந்தையில் டீசல் பீப்பாய் ஒன்றின் விலை குறைவாக இருந்த நிலையில், போர் காரணமாக தற்போது டீசல் மற்றும் பெற்றோல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஏப்ரல் மாதத்திலிருந்து ஒவ்வொரு டீசல் லீட்டருக்கும் 100 ரூபா வீதம் மானியத்தை வழங்கியதாகவும், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கும் லீட்டருக்கு 70 ரூபா வீதம் மானியம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை இலாபகரமான நிறுவனமாக மாற்றியுள்ளோம்.

கடந்த காலங்களைப் போலன்றி மிகக் குறைந்தளவு ஊழியர்களுக்கே நியமனம் வழங்கினோம்.

பொறியியலாளர்கள் உள்ளிட்ட 10 பேர் மாத்திரம் புதிதாக இணைத்துக்கொண்டு நிறுவனம் திறம்பட நிர்வகிக்கப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தற்போது பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறைந்த விலைக்கு எரிபொருளை விற்பனை செய்யும் நிலையில், தனியார் நிறுவனங்களால் அந்த விலைக்கு விற்க முடியாது எனத் தெரிவித்து விலையை உயர்த்தக் கோருகின்றன.

ஒரு நிறுவனம் டீசல் லீட்டருக்கு 132 ரூபாய் அதிகரிப்பை கோருகிறது. மற்றொரு நிறுவனம் லீட்டருக்கு 116 ரூபா அதிகரிப்பை கோருகின்றது. நாங்கள் அவ்வாறு அதிகரிக்கவில்லை.

70 ரூபாய் நிவாரணத்துடன் லீட்டருக்கு 10 ரூபாய் அதிகரித்து
மக்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

விலை அதிகரிக்காவிட்டால் எரிபொருளை விற்பனை செய்ய போவதில்லை என எரிபொருள் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. காரணம் பழைய ஒப்பந்தங்கள் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குகின்றன.

அந்த பழைய ஒப்பந்தம் மீண்டும் திருத்தம் செய்யப்படும்.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள போர் மற்றும் பணவீக்கச் சூழல் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நூல்கள் மீதான வரிகளை நீக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் எரிபொருள் மானியங்களை வழங்குவதோடு, பொதுமக்கள் மீதான பொருளாதார அழுத்தத்தைக் குறைத்து நிவாரணம் வழங்க தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்