எமது பிரதேசங்களில் இருக்கின்ற வளங்களை உச்சபட்சம் நாங்களே பயன்படுத்த வேண்டும் – ஈ.பி.டி.பி ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம்

கடலட்டை பண்ணைகள் விஸ்தரிக்கப்படுகின்றபோது, அவற்றின் உரிமையாளர்களாகவும் பயனாளர்களாகவும் அந்தந்த பிரதேசத்தினை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (3) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த, கட்சியின் ஊடகச் செயலாளர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் காலங்களில் முதலீட்டாளர்கள் என்ற அடிப்படையிலோ, ஏற்றுமதியாளர்கள் என்ற போர்வையிலோ, எங்களுடைய வளங்களும் எங்களுடைய வருமானங்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்ற சூழல் உருவாகக்கூடாது என்பதே எம்முடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

எமது கட்சியின் இந்த நிலைப்பாட்டை பிரதேசவாதமாகவோ இனவாதமாகவோ, தேசியவாதமாகவோ யாரும் கருதக்கூடாது எனவும், கடந்த பல தசாப்தங்களாக அழிவுகளையும் அவலங்களையும் சுமந்து, ஏனையவர்களோடு ஒப்பிடுகின்றபோது பின்தள்ளி இருக்கின்ற எமது மக்களின் எதிர்காலம் சுபீட்சமடையவேண்டும்.

அதற்கு எமது பிரதேசங்களில் இருக்கின்ற வளங்களை உச்சபட்சம் நாங்களே பயன்படுத்த வேண்டும் என்ற அக்கறையின் வெளிப்பாடாகவே அனைவரும் அணுகவேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

“கடலட்டை பண்ணைகளை மேலும் விஸ்தரிப்பது தொடர்பான கலந்துரையாடல் கடந்த சில தினங்களுக்கு முன்னர், கடற்றொழில் அமைச்சர் மற்றும் வடக்கு ஆளுநர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

எமது பிரதேசத்திற்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ளும் வகையில் எமது செயலாளர் நாயகத்தின் தீர்க்கதரிசனத்துடன், விஸ்தரிக்கப்பட்ட கடலட்டை உற்பத்தி பாரிய வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையிலேயே, தற்போதைய அரசாங்கமும் இந்த விடயத்தில் அவதானம் செலுத்தியுள்ளது.

இவ்வாறான விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றபோது, பல்வேறு பரிமாணங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இல்லாவிடின், எமது மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

குறிப்பாக முதலீட்டாளர்கள் என்ற அடிப்படையில், தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் போன்ற வெளியார் உள்வாங்கப்பட்டால், வருமானத்தின் பெரும் பகுதி எடுத்துச் செல்லப்பட்டுவிடும். எமது மக்களுக்கு போதிய பலன் கிடைக்காது.

அதேபோன்று, பூகோள அரசியல் ஆதிக்கத்துக்கும் பயன்படுத்தக்கூடிய அபாயம் இருக்கின்றது.

எனவே, தற்போயை முயற்சிகளிலும் இந்தப் பிரதேசத்தினை சேர்ந்தவர்களே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம் என்று தெரிவித்தார்.

arrest

இலஞ்சம் பெற்ற வருமான வரி அலுவலக ஊழியர் கைது

May 14, 2026

காணி ஒன்றின் மதிப்பீட்டு அறிக்கையை குறைந்த பெறுமதியில் தயாரித்துக் கொடுப்பதற்காக 35,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலன்னறுவை மாகாண வருமான

Raj

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் அம்பமாகும் ராஜபக்சர்களின் ஊழல் விவகாரங்கள்…

May 14, 2026

தமிழர்கள் மீதான இனவழிப்பு நடைபெற்று 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று இலஞ்சம் ஒழிப்பு

Shani

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு

May 14, 2026

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை, பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரம்

Omalbe

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை – ஓமல்பே சோபித தேரர்

May 14, 2026

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க

IJPMI3VQG5GVPFMLGZGLSHBJXA

ரெட் டீர் பகுதியில் 14 வயது சிறுமி மீது கொடூரத் தாக்குதல்: இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

May 14, 2026

கனடாவின் ரெட் டீர் (Red Deer) பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக

weather

காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் படிப்படியாக குறையும்

May 14, 2026

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு

QGKL6DBIBZEHBI2AL2ENAGP3SI

அல்பர்ட்டா பிரிவினை மனுவை இரத்து செய்த நீதிமன்றம்: முதற் தேச மக்களின் (First Nations) வெற்றி

May 14, 2026

அல்பர்ட்டா மாகாணத்தைப் பிரிப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய மனுவை (Separatist petition) செல்லாது என அறிவித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. முதற்

mark

கனடாவின் புதிய தேசிய மின்சார மூலோபாயம்: பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவிக்கவுள்ளார்

May 14, 2026

கனடிய அரசாங்கத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுத்தமான மின்சார மூலோபாயத்தை (Clean electricity strategy) பிரதமர் மார்க் கார்னி இன்று (வியாழக்கிழமை)

6ORIASPXUVDQTPFKTFQZZ5VA7U

ஸ்கார்பரோவில் சோகம்: இரண்டு வயதுக் குழந்தையைக் கொன்றதாகத் தாய் மீது கொலைக் குற்றம்

May 14, 2026

னடாவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில், தனது இரண்டு வயது பூர்த்தியாவதற்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில், ஒரு பெண்

65ZVLLNBG5GHNHIV3BZUWPIZBM

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு

May 14, 2026

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional

Mythri

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீதும் நிதி மோசடி வழக்கு; அபராதம் தொடர்பில் அறிக்கை கோரல்

May 14, 2026

கந்தளாய் சீனி கைத்தொழிற்சாலை நிதி மோசடி வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றிய குசுமதாச மஹாநாமவுக்கு

canada courts

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களைப் பகிர்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

May 14, 2026

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை (Child sexual abuse and exploitation material) கைவசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றைப் பரிமாற்றம்