தாராபுரம்:
தமது திரைப்படத்தை வெளியிடுவதற்காகத் தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தமது வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இபிஎஸ் குற்றச்சாட்டு:
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்தார். தனது ஆட்சிக் காலத்தில், விஜய்யின் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது, அவருக்காகத் துணை நின்றதாக அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
நன்றி உணர்வு இருக்கிறதா?:
உதவி பெறுவதற்காகத் தனது இல்லத்தில் விஜய் மூன்று மணிநேரம் காத்திருந்ததாகவும், அவ்வாறு உதவி செய்த தமக்கு, முதலமைச்சர் விஜய்க்குச் சிறிதளவேனும் நன்றி உணர்வு இருக்கிறதா எனவும் அவர் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அனல் பறக்கும் தேர்தல் களம்:
திரைத்துறையில் இருந்தபோது உதவி பெற்றவர், தற்போது அரசியலில் அதனை மறந்து செயல்படுவதாக அவர் சாடியுள்ளார். இடைத்தேர்தல் களத்தில் இரு கட்சிகளுக்கும் இடையேயான வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது.
#EPS #EdappadiPalaniswami #CMVijay #AIADMK #TVK #Dharapuram #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive