சென்னை:
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்த நிலையில், அவரை மீண்டும் சட்டமன்றத்திற்குள் அழைத்துச் செல்ல மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி முன்வந்துள்ள அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. இன்று சென்னையில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தமிமுன் அன்சாரி, அவரிடம் தனது வெற்றிச் சான்றிதழைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, “சிதம்பரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றிருந்தாலும், தலைவர் ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்ததால் இந்த வெற்றியை எங்களால் கொண்டாட முடியவில்லை. எனவே, எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்; அந்த இடத்தில் இடைத்தேர்தலில் நீங்கள் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்தேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஆனால், இந்தக் கோரிக்கையை அன்போடு மறுத்த மு.க.ஸ்டாலின், “அப்படியெல்லாம் பேசக்கூடாது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் சட்டமன்றத்திற்குச் சென்று மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்” எனக் கூறி தமிமுன் அன்சாரியை வாழ்த்தி அனுப்பியுள்ளார். திமுக கூட்டணியில் 73 இடங்கள் கிடைத்தும், ஸ்டாலினின் தோல்வித் தந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் உடன்பிறப்புகள் மீளாத நிலையில், தமிமுன் அன்சாரியின் இந்தச் செயல் அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#MKStalin #ThamimunAnsari #DMK #MJK #ChidambaramConstituency #BreakingNews #May7 #TamilNaduPolitics #ElectionResults2026 #StalinDefeat #PoliticalLoyalty #ThalapathyVijay #TVK #VijayAsCM #NewEraTN #AssemblyEntry #Byelection #RisingSun #StalinVsVijay #TamilNews_“`