மனித உரிமைகளுக்கான போராட்டத்திலும், இனப்படுகொலை மறுப்புக்கு எதிராகவும் எங்களது தமிழ் சகோதர சகோதரிகளுடன் நாங்கள் எப்போதும் துணையாக நிற்போம் என பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
தமிழ் இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருவதிலும், வரலாற்றை மறைக்க முயல்பவர்களுக்கு எதிராக உண்மையை பாதுகாப்பதிலும் நாங்கள் தமிழ் சமூகத்துடன் இணைந்து நிற்கிறோம். நினைவேந்தல், நீதிக்கான தேவை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தொடர்ச்சியான அழுத்தம் ஆகியவற்றின் அடையாளமாக, சிங்குவாக்குசி பூங்காவில் (Chinguacousy Park) அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடத்தை பிராம்ப்டன் (Brampton) நகரம் கொண்டிருப்பதில் பெருமிதம் கொள்கிறது. மனித உரிமைகளுக்கான போராட்டத்திலும், இனப்படுகொலை மறுப்புக்கு எதிராகவும் எங்களது தமிழ் சகோதர சகோதரிகளுடன் நாங்கள் எப்போதும் துணையாக நிற்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஈழத்தமிழர்களாகிய எங்களின் விடுதலைக்காகவும் தொடர்ச்சியாக எம்மீது நடைபெறும் இனவழிப்புக்கு எதிராகவும் குரல் கொடுப்பது மட்டுமல்லாமல் எமது தாயகமான தமிழீழத்தையும் எமது தமிழீழத்தேசியக் கொடியையும் அங்கீகரித்தமைக்காக நன்றிகள் என ஈழத்தமிழர்கள் சார்பில் மேயர் பட்ரிக் பிரவுனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.