உலகை ஆள வேண்டும் என்ற தனி மனிதனின் பேராசையால் ஒட்டுமொத்த மனிதகுலமும் வேதனையை அனுபவித்து வருகிறது!

தற்போது உலக அமைதி சீர்குலைந்துள்ளதாகவும், உலகை ஆள வேண்டும் என்ற ஒரு தனிமனிதனின் பேராசை காரணமாக ஒட்டுமொத்த மனிதகுலமும் வேதனையை அனுபவித்து வருவதாகவும் கொழும்பு மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பிரதான திருப்பலியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கிறிஸ்தவம் என்பது வெறும் பிரார்த்தனை செய்வது அல்லது புனித பைபிளின் பகுதிகளை வாசிப்பது மாத்திரம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய கர்தினால் ரஞ்சித் ஆண்டகை:

“குறிப்பாக இந்தக் காலப்பகுதியில் உலக அமைதிக்காக நாம் பிரார்த்திப்போம். ஒரு மனிதனின் சுயநலத்தாலும், உலகை ஆள வேண்டும் என்ற அந்த மனிதனின் ஆசையாலும் இன்று உலக அமைதி சீர்குலைந்துள்ளது. இதனால் மனிதகுலத்திற்கே பெரும் வேதனை ஏற்பட்டுள்ளது. அந்த மனிதனின் மனதை மாற்றவும், இந்த கடினமான மற்றும் தவறான பாதையிலிருந்து அவரை விலக்கவும் நாம் பிரார்த்திப்போம். கிறிஸ்தவத்தை பின்பற்றுபவர்களால் இவ்வாறான செயல்களைச் செய்ய முடியாது.

கிறிஸ்தவம் என்பது வெறும் பிரார்த்தனை செய்வதும், பைபிளை வாசிப்பதும் அல்லது பல போதகர்களை அருகில் வைத்துக்கொண்டு உலகிற்கு பிரசங்கம் செய்வதும் அல்ல. கிறிஸ்தவம் என்பது அன்பு மற்றும் வாழ்வியல் முறையாகும். அன்பு என்பது ஒரு சேவகனாக இருப்பது, கடவுள் முன்னிலையிலும் அண்டை வீட்டார் முன்னிலையிலும் உண்மையாக இருப்பது. ஒரு தலைவன் என்பவன் சேவகனாக இருக்க வேண்டும் என்று போதிக்கப்பட்டுள்ளது, ஆனால் இன்று உலகை ஆளுபவர்கள் தலைவர்களாக இருக்கிறார்களே தவிர சேவகர்களாக இல்லை. அவர்கள் அதிகாரத்தின் பின்னால் ஓடும் ஆட்சியாளர்களாகவே இருக்கிறார்கள்.”

ir

அமெரிக்கா – ஈரான் போர்நிறுத்தத்தை நீட்டிக்க மறைமுகப் பேச்சுவார்த்தை: வெள்ளை மாளிகை நம்பிக்கை

April 16, 2026

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு வார காலப் போர்நிறுத்தம் வரும் ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதனை நீட்டிப்பதற்கான

save

சூடான் உள்நாட்டுப் போர் 4-வது ஆண்டில் நுழைவு: 120 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கனடா உறுதி செய்தது

April 16, 2026

சூடானில் நிலவும் உள்நாட்டுப் போர் அதன் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நிலையில்,

BTF_1

இலங்கையின் தந்திரத்துக்கு சர்வதேச சமூகம் பலியாகக்கூடாது – பிரித்தானிய தமிழர் பேரவை

April 16, 2026

இலங்கையில் இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்களுக்கு உள்நாட்டு நீதிப்பொறிமுறை மூலம் தீர்வு காண முடியாது என்றும், சர்வதேச சமூகம் இதில் விழிப்புடன்

che

மன்னாரில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினை கண்டித்துப் போராட்டம்!

April 16, 2026

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ பணியாளர்கள் நேற்றுக்(15)

ehe

வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 10 பேர் காயம்

April 16, 2026

எஹெலியகொடை நகரில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஏனைய வாகனங்களுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று(15) இரவு

t

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு!

April 16, 2026

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த அலுவலகத்தினை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர்

ss

மோசடிகளுக்காக இலங்கை வந்த 9 சீனர்கள் கட்டுநாயக்கவில் கைது?

April 16, 2026

கணினி வழி நிதி மோசடிகளைச் முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த 9 சீனர்கள் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான

death

வயிற்றுவலியுடன் வாந்தி; சிறுமி உயிரிழப்பு – யாழில் சம்பவம்

April 16, 2026

யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா

tur

துருக்கிப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி

April 16, 2026

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பாடசாலை

ar

அமெரிக்காவின் செய்தியுடன் ஈரான் சென்றார் பாகிஸ்தான் பீல்ட் மார்ஷல் : ஈரான் அரசு ஊடகம் தகவல்

April 15, 2026

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு முக்கிய மத்தியஸ்தராக உருவெடுத்துள்ள பாகிஸ்தானின் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் (Asim Munir), உயர்மட்டக்

ssds

கனடா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வாய்ப்பு?

April 15, 2026

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் (Alexander Stubb), கனடா பிரதமர் மார்க் கார்னியுடனான (Mark Carney) தனது முதல் அதிகாரப்பூர்வ

str

நெடுந்தீவு மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்னிறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

April 15, 2026

நெடுந்தீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி ‘நெடுந்தீவு கவனயீர்ப்பு போராட்ட ஏற்பாட்டுக் குழு’ போராட்டத்திற்கான